காஷ்மீர் விவகாரம் :
மத்திய அரசை தாக்கும் பிரியங்கா
காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது முதல், காங்., தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசை கடுமையாக தாக்கி வருகிறது. இந்த விவகாரத்தில் காங்., எம்.பி., ராகுலை தொடர்ந்து பிரியங்காவும் மத்திய அரசை கடுமையாக தாக்கி கருத்து வெளியிட்டுள்ளார்.
காங்., எம்.பி., ராகுல் மற்றும் காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக் இடையே டுவீட்டரில் நடந்த கருத்து மோதலை தொடர்ந்து, காஷ்மீர் செல்ல உள்ளதாக ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் அறிவித்தனர். "அரசியல் தலைவர்கள் காஷ்மீருக்கு வர வேண்டாம்; அது அமைதியை சீர்குலைக்கும்" என காஷ்மீர் நிர்வாகம் எச்சரித்ததையும் மீறி, நேற்று முன்தினம் (ஆக.,24) ராகுல் உள்ளிட்ட 11 எதிர்க்கட்சி தலைவர்கள் காஷ்மீருக்கு சென்றனர். ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட, அதே விமானத்தில் டில்லிக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் ராகுலின் இந்த பயணத்தை குறிப்பிட்டு, காட்டமான டுவீட் ஒன்றை காங்., பொதுச் செயலாளரான பிரியங்கா பதிவிட்டுள்ளார். ஸ்ரீநகரில் இருந்து ராகுல் டில்லி திரும்பும் போது விமானத்தில் பெண் ஒருவர், காஷ்மீரில் தான் சந்தித்த பிரச்னைகள் குறித்து ராகுலிடம் கடுமையாக கூறும் வீடியோ ஒன்றை டுவீட்டரில் பதிவிட்டுள்ளார் பிரியங்கா.
அத்துடன், இன்னும் எத்தனை காலம் இது தொடரும்? தேசியவாதம் என்ற பெயரில் லட்சக்கணக்கான மக்கள் ஒடுக்கப்பட்டு, நசுக்கப்படுகிறார்கள். எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை அரசியல் ஆக்குவதாக கூறுபவர்களுக்காக இந்த வீடியோ என குறிப்பிட்டுள்ளார். மற்றொரு டுவீட்டில், காஷ்மீரில் ஜனநாயக அடிப்படை உரிமைகள் கிடைக்கச் செய்யாமல் மறுப்பதை விட அரசியலும், தேச விரோதமும் இருக்காது. இந்த விவகாரத்தில் குரல் எழுப்ப வேண்டியது நமது கடமை. இதை நாங்கள் நிறுத்த மாட்டோம் என பதிவிட்டுள்ளார்.
श्रीनगर से
वापस आते वक्त फ्लाइट में एक महिला
से अपनी
मुश्किल बताते हुए।
0 comments:
Post a Comment