மட்டக்களப்பு பதற்றம்
தணிந்தது
மட்டக்களப்பில்
நேற்றைதினம் இடம்பெற்ற போராட்டம் நேற்று இரவு
11 மணியளவில் கைவிடப்பட்டதாக அங்கிருந்துவரும்
தகவல்கள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பு
இந்து மயானத்தில்
தாக்குதல் தாரியான
மொஹமட் அஸாத்தின்
உடற்பாகம் புதைக்கப்பட்ட
விவகாரம் பெரும்
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள
நிலையில் அதற்கு
எதிர்ப்பு தெரிவித்து
நேற்றைய தினம்
போராட்டம் இடம்பெற்றது.
இதனால்
குறித்த பகுதியில்
பொலிஸார் மற்றும்
விசேட அதிரடி
படையினர் குவிக்கப்பட்டு
பதற்றமான நிலை
ஏற்பட்டது.
வீதிகளில்
டயர்கள் எரிந்து
போராட்டம் இடம்பெற்ற
நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களை
கலைக்க பொலிஸார்
மற்றும் விசேட
அதிரடி படையினர்
குவிக்கப்பட்டு மக்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை
மற்றும் நீர்த்தரைப்
பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
போராட்டம்
காரணமாக மட்டக்களப்பு
– திருகோணமலை உட்பட பிரதான வீதிகளில் போக்குவரத்து
பாதிப்பு ஏற்பட்டிருந்தமையினால்
இந்த கண்ணீர்ப்புகை
மற்றும் நீர்த்தரை
பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால்
போராட்டம் தற்போது
கைவிடப்பட்டதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும்
இன்றைய (28) தினமும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட
மக்கள் உத்தேசித்திருப்பதாக
தகவல்கள் வெளியாகியுள்ளன.
0 comments:
Post a Comment