ஹக்கீமுடன் பேசியது என்ன?
பஸில் ராஜபக்ஸ விளக்கம்
ஐக்கிய
தேசிய முன்னணியின்
பங்காளிக் கட்சியான
சிறிலங்கா முஸ்லிம்
காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன்
சிறிலங்கா பொதுஜன
முன்னணியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஸில்
ராஜபக்ஸ இரகசியப் பேச்சு
நடத்தியுள்ளார்.
இந்தச்
சந்திப்பு தொடர்பில்
பஸில் ராஜபக்ஸ கருத்துத் தெரிவிக்கையில்,
மஹிந்த
ராஜபக்ஸ தலைமையிலான கடந்த
ஆட்சியில் சிறிலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் பங்காளிக்
கட்சியாக இருந்தது.
இந்தநிலையில்,
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுடன் மீண்டும் எமது
ஆட்சி மலரப்
போகின்றது.
அதற்கு
முற்கூட்டியே சிறிலங்கா முஸ்லிம்
காங்கிரஸின் ஆதரவைப் பெறும் வகையில் அதன்
தலைவரான அமைச்சர்
ரவூப் ஹக்கீமுடன்
பேச்சு நடத்தியுள்ளேன்.
தமது
கட்சி உறுப்பினர்களுடன்
கலந்துரையாடிய பின்னர்தான் இது தொடர்பில் முடிவெடுக்கலாம்
என்று அவர்
என்னிடம் தெரிவித்தார்
என குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை,
ஹக்கீமுக்கும் பஸிலுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பை
உறுதிப்படுத்திய முஸ்லிம்
காங்கிரஸ் தரப்பு, அதில்
பேசப்பட்ட விடயங்கள்
எதனையும் வெளிப்படுத்தவில்லை.
0 comments:
Post a Comment