இது அமைச்சர்கள் இல்லாத பிரதேசத்தில்!
பருத்தித்துறை மீன்பிடி துறைமுகத்தின்
அபிவிருத்திப் பணிகள்
ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்
பருத்தித்துறை
மீன்பிடி துறைமுகத்தின்
அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன
தலைமையில் இன்று
(30) முற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
”மைத்ரி
ஆட்சி – நிலையான
நாடு” மற்றும்
”பேண்தகு மீன்பிடி
கைத்தொழிற் துறையின் ஊடாக மீன்பிடித் துறையில்
தெற்காசிய வலயத்தில்
முன்னோடியாக திகழ்தல்” எனும் எதிர்கால நோக்கிற்கமைய
வடக்கு மீன்பிடித்
துறையை மேம்படுத்தும்
திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் இந்த மீன்பிடித்
துறைமுகம் இலங்கையில்
இதுவரை நிர்மாணிக்கப்பட்ட
மிக விசாலமான
மீன்பிடித் துறைமுகமாகும். இதற்காக
12,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாரியளவிலான
300 படகுகளுக்கு தேவையான வசதிகளை ஒரே நேரத்தில்
பெற்றுக் கொள்ளக்கூடிய
இந்த துறைமுகத்தின்
இறங்குதுறை 7.1 ஹெக்டயார் பரப்பளவையும் துறைமுகப் படுக்கை
18.6 ஹெக்டயார் பரப்பினையும் கொண்டுள்ளதுடன்,
880 மீற்றர் நீளத்தையும் 480 மீற்றர் அகலத்தையும் கொண்டுள்ளது.
உலகிலுள்ள
நவீன ரக
மீன்பிடி படகுகளை
பாதுகாப்பாக பயன்படுத்தல், பிடிக்கப்படும்
மீன்களை கரை
சேர்த்தல். எரிபொருள் மற்றும் ஏனைய வசதிகளை
பெற்றுக்கொள்ளல், படகுகளை பழுதுபார்த்தல், ஐஸ் மற்றும்
குளிர்சாதன வசதிகள், படகுகளுக்கான இயந்திரங்களைப் பெற்றுக்கொள்ளல்,
மீன் விற்பனை,
வலை தயாரிப்பு,
கடைத்தொகுதி, கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கான வசதிகள், கரையோரப் பாதுகாப்பு
சேவைகள், மீன்பிடித்
திணைக்கள அதிகாரிகளின்
சேவைகள் உள்ளிட்ட
அனைத்து வசதிகளையும்
இந்த மீன்பிடித்
துறைமுகத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
அமைச்சர்கள்
பீ.ஹெரிசன்,
அப்துல் ஹலீம்,
வட மாகாண
ஆளுநர் சுரேன்
ராகவன், பாராளுமன்ற
உறுப்பினர்கள் காதர் மஸ்தான், அங்கஜன் ராமநாதன்,
எம்.ஏ.
சுமந்திரன், மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன்
உள்ளிட்ட பெரும்பாலான
மாகாண மக்கள்
பிரதிநிதிகள், ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.
செனெவிரத்ன உள்ளிட்ட அரச அதிகாரிகள் இந்த
நிகழ்வில் பங்குபற்றினர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.