கல்முனை மக்கள் ஏமாற்றப்பட்டார்களா?
3வருடங்களுக்கு முன்…..
கல்முனை நகர அபிவிருத்தி திட்டம்
ரூ 500 மில்லியன் . 4 மாதங்களுக்குள்
பயன்படுத்த வேண்டும்
நான்கு
மாதங்களுக்குள் 500 மில்லியனில் கல்முனை
புதிய நகர்
அபிவிருத்தி திட்டம் 2016 ஜூலை 15 முதல் தொடக்கம்
என மக்களுக்குத்
தெரிவிக்கப்பட்டது..
அதுமாத்திரமல்லாமல்
ரூ 500 மில்லியனை
. கல்முனை புதிய
நகர் அபிவிருத்திக்காக
4 மாதங்களுக்குள் பயன்படுத்த வேண்டும் என்றும் மக்களுக்கு
கூறப்பட்டிருந்தது.
கல்முனை
புதிய நகர்
அபிவிருத்தி திட்டம் 2016 ஜூலை 15 முதல் தொடக்கம்
என செய்தி
வெளியாகியதை அடுத்து கல்முனைப் பிரதேச மக்கள்
கல்முனையை அபிவிருத்தி
செய்து அழகு
படுத்தப்போகின்றார்கள். பொழிவு இழந்து
காட்சி தரும்
கல்முனை பொதுச்
சந்தை மிளிரப்
பொகின்றது. எமது மாநகர சபைக்கு நவீன
கட்டடம் வரப்
போகின்றது,கல்முனை மக்களின் மக்கள் மண்டபம் புதுப்
பொழிவு பெற்று
அழகு பெறப்
போகின்றது என்றெல்லாம்
மக்கள் சந்தோஷமடைந்தனர்.
ஆனால்,
கல்முனையில் இடம்பெற்றது அபிவிருத்தி வேலைகள் அல்ல நகர அபிவிருத்தி திட்டம்
தொடர்பான உயர்மட்டக்
கூட்டங்கள் எனக்கூறி கூடி கலைந்தது மட்டும்தான்! என்பது இப்போது மக்களுக்கு புரிந்திருக்கின்றது.
அந்த
உயர் மட்டக்கூட்டம்
இடம்பெற்று இன்று ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி 3 வருடங்கள் அதாவது 37 மாதங்கள் கடந்துவிட்டன.
ரூ
500 மில்லியனை . கல்முனை புதிய நகர் அபிவிருத்திக்காக
4 மாதங்களுக்குள் பயன்படுத்த வேண்டும் என்று எமது
மக்கள் பிரதிநிதிகளால்
மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால்,கல்முனையில் 500 மில்லியன்
ரூபாய்கள் செலவில்
அபிவிருத்தி வேலைகள் என்ன நடந்ததுள்ளது என்று
மக்கள் கேள்வி
எழுப்புகின்றனர்.
கல்முனை
நகர அபிவிருத்தி
திட்டம் தொடர்பான
உயர்மட்டக் கூட்டம் ஒன்று கடந்த 2016 ஆம்
ஆண்டு ஜுலை
மாதம் 15 ஆம்
திகதி
கல்முனை மாநகர சபைக் கட்டடத்தில் நகர
திட்டமிடல்,நீர்வளங்கள் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப்
ஹக்கீம் அவர்களின்
தலைமையில் அன்று விளையாட்டுத்துறை
பிரதி அமைச்சராகப் பதவி வகித்த
HMM.ஹரிஸ் சுகாதர
சுதேச வைத்தியத்துறை
பிரதி அமைச்சர்
பைசால் காசீம்,கிழக்கு மாகாண
முன்னாள் முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அகமட்,பாராளுமன்ற உறுப்பினர்
MIM.மன்சூர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள்,மாநகர சபை
முன்னாள் மேயர்,முன்னாள் பிரதி
மேயர்,முன்னாள்
உறுப்பினர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள்,திணைக்கள தலைவர்கள்
உயர் அதிகாரிகள்
என பலரின்
பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
இக்கூட்ட்த்தில்
கல்முனை அபிவிருத்தி
சம்மந்தமாக பல திட்டங்களைச் செய்யப்போவதாக முடிவு
எடுக்கப்பட்டிருப்பதாக மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது.
இதோ
இது சம்மந்தமாக
-----------
Sarjoon Lafeer அவர்கள்
தனது முகநூலில்
வெளியிட்ட பதிவு
முக நூல்
நண்பர்களின் பார்வைக்கு .........
0 comments:
Post a Comment