விமானமும் ஹெலிகாப்டரும்
நேருக்கு நேர் மோதிய
விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த
7 பேர் உயிரிழப்பு.
ஸ்பெயின்
நாட்டில் நடுவானில்
விமானமும் ஹெலிகாப்டரும்
நேருக்கு நேர்
மோதிக் கொண்ட
விபத்தில் தொழிலதிபர்
மற்றும் அவரது
குடும்பத்தினர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.
ஜெர்மனியைச்
சேர்ந்த பிரபல
தொழில் அதிபரான
ஆகஸ்ட் இன்செல்கம்மர்
ஜூனியர் தனது
பிறந்த நாளை
கிழக்கு ஸ்பெயினில்
உள்ள Murica தீவில் கொண்டாட முடிவு செய்தார்.
தனியார் நிறுவனத்திற்கு
சொந்தமான ஹெலிகாப்டரில்
தனது மனைவி
மற்றும் குழந்தைகளுடன்
புறப்பட்ட நிலையில்,
கடற்கரை நகரான
இன்காவில் பறந்து
கொண்டிருந்த போது, எதிரே வந்த சிறிய
இலகு ரக
விமானம் நேருக்கு
நேர் மோதியது.
இந்த
விபத்தில் தொழில்
அதிபர் குடும்பத்தினர்
உட்பட 7 பேரும்
உயிரிழந்தனர். இந்த விபத்து எவ்வாறு ஏற்படும்
என்ற
காரணம் என்ன என்பது இதுவரை தெரியாத
நிலையில், இது
குறித்து விரிவான
விசாரணை நடத்த
உத்தரவிடப்பட்டுள்ளது. உள்நாட்டு நேரப்படி
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒன்று ஐம்பது மணியளவில் விபத்து
நடந்ததாக கூறப்படுகிறது.
விபத்துக்குள்ளான
ஹெலிகாப்டர், ஜெர்மன் ஆபரேட்டரான ரோட்டார் ஃப்ளக்((Rotorflug))
நிறுவனத்துக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது.
இதனிடையே
உயிரிழந்தவர்கள் குறித்து விசாரணை நடந்து வருவதாக
பலேரிக் தீவுகளின்
தலைவர் பிரான்சினா
ஆர்மெங்கோல்((Francina Armengol)) டுவிட் செய்துள்ளார்.
அமைச்சரும்
அவசரக்குழுவும் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு
செய்து வருவதாகவும்
அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில்
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு
ஸ்பெயின் பிரதமர்
பெட்ரோ சான்சஸ்
தனது ஆழ்ந்த
இரங்கலை தெரிவித்துள்ளார். அந்நாட்டு அரசு
சார்பில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.