முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்
இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவினரால் கைது
5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ மனு
ஐ.என்.எக்ஸ்.,
மீடியா வழக்கில்
கைது செய்யப்பட்டுள்ள
சிதம்பரம், டில்லியில் உள்ள ரோஸ் அவென்யூவில்
உள்ள சிபிஐ
சிறப்பு கோர்ட்டில்
இன்று (ஆக.,22)
ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 5 நாள்
காவலில் எடுத்து
விசாரிக்க அனுமதிக்க
வேண்டும் என
சிபிஐ சார்பில்
மனு தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ்.,
மீடியா நிறுவன
முறைகேடு வழக்கில்
காங்., மூத்த
தலைவரும், முன்னாள்
மத்திய அமைச்சருமான
சிதம்பரம், நேற்று(ஆக.,21) இரவு கைது
செய்யப்பட்டார். டில்லியில் உள்ள சிபிஐ தலைமை
அலுவலகத்தில் அவர் வைக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ
பரிசோதனையும் நடந்தது. தொடர்ந்து இன்று அவரிடம்
சிபிஐ அதிகாரிகள்
விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்
ஒத்துழைப்பு வழங்கவில்லை எனக்கூறப்படுகிறது.
இதனை
தொடர்ந்து,இன்று
பிற்பகல், ரோஸ்
அவென்யூ வளாகத்தில்
உள்ள சிறப்பு
கோர்ட்டில், நீதிபதி அஜய்குமார் முன்னிலையில், சிதம்பரத்தை
சிபிஐ அதிகாரிகள்
ஆஜர்படுத்தினர். இதற்காக சிதம்பரத்தின் மனைவி நளினி,
மகன் கார்த்தி
ஆகியோர் கோர்ட்டிற்கு
வந்தனர். சிதம்பரம்
சார்பில், கபில்சிபல்,
அபிஷேக் சிங்வியும்,
சிபிஐ சார்பில்
துஷார் மேத்தாவும்
ஆஜரானார்கள். கோர்ட் வளாகம் பகுதியில் பலத்த
போலீஸ் பாதுகாப்பு
போடப்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்ததாக கூறி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) கைது செய்தது
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்பிணை மறுக்கப்பட்ட நிலையில் ப.சிதம்பரத்தை CBI அதிகாரிகள் கைது செய்தமையினால் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
0 comments:
Post a Comment