2019.08.20 அன்று இடம்பெற்ற
அமைச்சரவைக் கூட்டத்தில்
மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்




2019.08.20 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

01. தொழில்துறை மற்றும் தொழில் கல்வி தொடர்பிலான தேசிய கொள்கைதேசிய கல்வி ஆணைக்குழு (நிகழ்ச்சி நிரலில் 6ஆவது விடயம்)

தொழில்துறை மற்றும் தொழில் கல்வி பயிற்சிக்குள் பிரவேசிப்பதற்கு உள்ள சந்தர்ப்பத்தை விரிவுபடுத்தல் மற்றும் மாணவர்களுக்கு பாடசாலையில் தொழில் துறை மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்களில் இணைந்துகொள்வதற்கு சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுத்தல் தொழில்துறை மற்றும் தொழில் கல்வி தொடர்பிலான தேசிய கொள்கையின் நோக்கமாகும். சந்தையில் நிலவும் மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள துறைகளுக்கான தொழில் துறையில் உயர்வான பங்களிப்புடன் பல்வேறு பயிற்சிக்கான சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுத்தல் மற்றும் அந்தந்த துறையில் மேற்கொள்ளப்படும் முதலீட்டில் ஆகக்கூடிய நன்மைகளை பெற்றுக்கொள்வதற்காக பயிற்சி நிறுவனங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாட்டு ஆற்றலை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இதன் மூலம் வசதி கிடைக்கின்றது. இதன் நோக்கத்தை முன்னெடுப்பதற்கு அரச மற்றும் தனியார் துறைகளில் தொழில்துறை மற்றும் தொழில் கல்வி வல்லுநர்கள் மற்றும் கைத்தொழில் துறை சார்ந்தவர்களின் பங்களிப்பு மற்றும் விரிவான ஆலோசனைகளை பெற்றுக் கொண்டு தயாரிக்கப்பட்டு ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட தொழில்துறை மற்றும் தொழில்கல்வி தொடர்பான தேசிய கொள்கை திருத்தச்சட்டமூலம் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

02. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மற்றும் LEPL ஜோர்ஜியாவின் தேசிய சுற்றுலா நிர்வாக நிறுவனத்துடனான சுற்றுலா துறையில் புரிந்துணர்வு உடன்படிக்கை (நிகழ்ச்சி நிரலில் 11ஆவது விடயம்)

03 வருட (03) காலத்திற்கு செல்லுபடியான மற்றும் அதன் பின்னர் மேலும் 3 வருட (03) காலப்பகுதிக்காக சுயமாக புதுப்பிக்கப்படும் சுற்றுலா துறையின் புரிந்துணர்வு தொடர்பான உடன்படிக்கை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மற்றும் LEPL ஜோர்ஜியா தேசிய சுற்றுலா நிர்வாக நிறுவனத்திற்கு இடையில் கைச்சாத்திடுதல் மற்றும் அதற்காக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவருக்கு அதிகாரத்தை வழங்குவதற்காக சுற்றுலா அபிவிருத்தி வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 03. அமெரிக்க அரசாங்கத்துடன் எட்டப்பட்ட இல 383 – 126 மற்றும் இல 383- 127 கொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கை (நிகழ்ச்சி நிரலில் 13ஆவது விடயம்)

ஜனநாயக நல்லாட்சி மற்றும் சமூக ஒன்றிணைந்த தன்மைக்கான புரிந்துணர்வு தன்மையை வலுப்படுத்தும் வேலைத்திட்டம் மற்றும் பேண்தகு உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் வேலைத்திட்டம் என்பதனை நடைமுறைப்படுத்துவதற்கு மானியத்தை பெற்றுக்கொள்வதற்காக 2011ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கம் அமெரிக்க அரசாங்கத்துடன் 2 புரிந்துணர்வு உடன்படிக்கை மேற்கொண்டது. இதன் நிகழ்ச்சி நிரலுக்காக வழங்கப்படும் பங்களிப்புக்கமைவாக 35.95 மில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து 47.81 டொலர்கள் வரையிலும் 38.86 அமெரிக்க டொலர்களிலிருந்து 44.52 அமெரிக்க டொலர்கள் வரையில் அதிகரித்து வேலைத்திட்டம் நிறைவுபெறும் நாளை 2022 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் நீடித்த மற்றும் பேண்தகு உள்ளடக்கும் பொருளாதார மேம்பாட்டை மேற்கொள்ளும் வேலைத்திட்டத்தின் இலக்காக நவீன எரிசக்தி சேவையை உள்ளடக்கி சம்பந்தப்பட்ட உடன்படிக்கையில் திருத்தத்தை மேற்கொள்;வதற்காக நிதி அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. மிஹிந்தலை உலக மரபுரிமை இடத்தை மேம்படுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 14ஆவது விடயம்)

அநுராதபுரத்தை இரவு தங்குமிட சுற்றுலா கிராமமாக மேம்படுத்துவதற்காக மிஹிந்தலை உலக மரபுரிமை இடத்தை அபிவிருத்தி செய்தல் புனரமைத்தல் மற்றும் பொலிவூட்டுதல் ஆகியவற்றுக்காக 275 மில்லியன் ரூபாவை (வட்டியில்லாத) ஒதுக்கும் வரையறுக்கப்பட்ட இலங்கை மின்சார (தனியார்) நிறுவனத்தினால் பொது சமூக பொறுப்புக்கூறல் வேலைத்திட்டமாக செயல்படுத்த முடியும் என்று பிரதமரினால் அறிவிக்கப்பட்டதை அமைச்சரவை கவனத்தில் கொண்டுள்ளது.

05. களனி பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக காணி ஒன்றை கொள்வனவு செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 17ஆவது விடயம்)

களனி பல்கலைக்கழகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கணனி மற்றும் தொழில்நுட்ப பீடம் தற்போது நடத்தப்பட்டுவரும் வாடகை அடிப்படையில் பெற்றுக் கொள்ளப்பட்ட கட்டிடம் மற்றும் சுற்றாடலில் இடவசதி, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் , சேமநலன் நடவடிக்கைகளுக்கு போன்றே அலுவலக பணியாளர்களுக்கும் தேவையான வசதிகளை செய்வதற்கும் போதுமானதாக இல்லை என்பதினால் இந்த தேவையை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் பல்கலைக்கழகத்தில் இருந்து 1 கிலோமீற்றர் தூரத்தில் கொழும்பு கண்டி வீதியில் கண்டிக்கு எதிராக அமைந்துள்ள 2 ஏக்கர் 2 ரூட் 11.60 பேர்ச் அளவைக் கொண்ட காணியொன்றை 539 மில்லியன் ரூபாவிற்கு அரசாங்கத்தின் மதிப்பீடு செய்யப்பட்ட தொகைக்கு பல்கலைக்கழகத்தினால் பெறப்பட்ட நிதியில் கொள்வனவு செய்வதற்காக நகர திட்டமிடல் நீர்விநியோகம் மற்றும் உயர்கல்வி அமைச்சர் சமர்ப்பித்; பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. தொழில் துறை அபிவிருத்திக்கான தேசிய கொள்கை (நிகழ்ச்சி நிரலில் 22ஆவது விடயம்)

தேசிய கைத்தொழில் துறை அபிவிருத்தி மற்றும் நிலைத்திருப்பது தொடர்பில் தற்பொழுது நடைமுறையில் உள்ள பல்வேறு கொள்கைகள் மத்தியில் நிலவும் திறமை. தேவையான தொழில்நுட்பம் மற்றும் அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லாமை, திறன் ஆற்றல் வளம் குறைந்தமை, அதிக எரிசக்தி செலவு, தொழிற்சாலை அருகாமையில் சுற்றாடல் சவால்கள் மற்றும் சட்ட ரீதியிலான சுற்றாடலில் நிலவும் குறைபாடுகள் முதலானவை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த பிரச்சினையை குறைத்து நாட்டின் அபிவிருத்தி தொடர்பில் பங்களிப்பு செய்யக்கூடிய வெற்றிகரமான கைத்தொழில் மூலோபாயம் ஒன்றை வகுப்பது தற்போது தேவையாக அமைந்துள்ளது. இதற்கமைவாக கைத்தொழில் அபிவிருத்திக்கான தேசிய கொள்கையை வகுப்பதற்காக கைத்தொழில் மற்றும் வணிக அலுவல்கள் மற்றும் நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்தல் கூட்டுறவ அபிவிருத்தி தொழில்பயிற்சி மற்றும் திறனாற்றல் அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப பிரிவில் ஈடுபட்டுள்ள 10 ஆயிரம் இளைஞர் யுவதிகளுக்காக தொழில் துறை அபிவிருத்திக்கான வேலைத்திட்டம் (நிகழ்ச்சி நிரலில் 23ஆவது விடயம்)

தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப துறை நாட்டின் இளைஞர் சமூகத்தினர் மத்தியில் பிரபல்யம் மற்றும் கவனத்தை ஈர்த்துள்ள துறையாக அடையாளங் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த துறை தொடர்பில் இளைஞர் யுவதிகளுக்கு விசேட பயிற்சி வழங்கி பயன்களைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் முழு நாட்டையும் உள்ளடக்கிய வகையில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் தொடர்பில் கூடுதலாக கவனம் செலுத்தும் 10000 இளைஞர் யுவதிகளை தெரிவு செய்து அவர்களுக்கு விசேட பயிற்சி ஒன்றை வழங்குவதற்கும் இவர்கள் வர்த்தக முயற்சியொன்றை ஆரம்பிப்பது தொடர்பான ஆலோசனையொன்றை பெற்றுக்கொண்டு அதனை மதிப்பீடுசெய்வதுடன் வெற்றிகரமான 3000 விண்ணப்பதாரர்களை தெரிவு செய்து அவர்களுக்கு மடி கனணி இணையதள தொடர்பு தேவையான ஏனைய உபகரணங்கள் மற்றும் நிதி வசதி வழங்குவதற்கான திட்டமொன்று தேசிய தொழில்துறை அபிவிருத்தி அதிகார சபையின் கண்காணிப்பின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்காக கைத்தொழில் மற்றும் வணிக அலுவல்கள் நீண்டகாலம் இடம்பெயர்ந்த நபர்களை மீளக்குடியமர்த்தல், கூட்டுறவு அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறனாற்றல் அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. பிரதேச தொழில் பேட்டைகளில் தொழிற்சாலைகளை அமைப்பதற்காக காணியை ஒதுக்கீடு செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 25ஆவது விடயம்)

கைத்தொழில் மற்றும் வணிக அலுவல்கள் நீண்டகாலம் இடம்பெயர்ந்த நபர்களை மீளக்குடியமர்த்தல், கூட்டுறவு அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறனாற்றல் அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் பிரதேச தொழில் பேட்டை அபிவிருத்தி வேலைத்திட்டம் பிரதேச மட்டத்தில் தொழிற்சாலைகளை மேம்படுத்தும் நோக்கத்தைக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் முக்கிய வேலைத்திட்டமாகும். இதற்கமைவாக இந்த தொழில் பேட்டைகளில் முதலீடுகளை மேற்கொள்வதற்காக இந்த அமைச்சு திட்டத்தை மதிப்பீட்டுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள 18 முதலீட்டாளர்களுக்கு 35 வருட கால குத்தகை அடிப்படையில் சம்பந்தப்பட்ட தொழில் பேட்டைகளில் காணி ஒன்றை ஒதுக்கீடு செய்வதற்காக கைத்தொழில் மற்றும் வணிக அலுவல்கள் நீண்டகாலம் இடம்பெயர்ந்த நபர்களை மீளக்குடியமர்த்தல், கூட்டுறவு அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறனாற்றல் அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. சம்பந்தப்பட்ட அனைத்து பிரிவு/ துணை பிரிவுகளை உள்ளடக்கிய வகையிலான விவசாய கொள்கை (நிகழ்ச்சி நிரலில் 35 ஆவது விடயம்)

தற்பொழுது உள்ள விவசாயக் கொள்கை விவசாய பயிர் பிரிவுகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்தி 2007 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக புதிய வர்த்தக போக்கிற்கு பொருத்தமான வகையிலும் தற்போதைய தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும் அனைத்து பிரிவு / உப பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் புதிய விவசாய கொள்கை ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதில் பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்வதில் ஆலோசகர்களின் நடவடிக்கையின் ஊடான அதன் கொள்கை திருத்த சட்ட மூலத்தை மேம்படுத்துவதற்காக தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீளக்குடியமர்த்;துதல் மற்றும் புனர்வாழ்வு வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமரும் விவசாய கிராமிய பொருளாதார அலுவல்கள் நீர்பாசனம் மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சரும் அமைச்சரவை தெரிந்து கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு அமைச்சரவை குறிப்பை அமைச்சரவையினால் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

10. இந்திய அரசாங்கத்தின் வீடமைப்பு நிதியுதவி வேலைத்திட்டத்தின் கீழ் பெருந்தோட்ட மக்களுக்காக பத்தாயிரம் வீடுகளை நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 39ஆவது விடயம்)

இந்திய அரசாங்கத்தின் வீடமைப்பு நிதியுதவி வேலைத்திட்டத்தின் கீழ் பெருந்தோட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள 10,000 வீடுகளுக்கு குடிநீர் வசதி பெற்றுக் கொடுத்தல் உள்ளக வீதி மற்றும் தேசிய மின்சக்தியை விநியோகிப்பது தொடக்கம் மின்சாரத்தைப் பெற்றுக்கொடுத்தல் நிலத்தைப் பாதுகாப்பதற்காக நிர்மாணிக்கப்பட்ட மதில், மழைநீர் வழிந்தோடுவதற்காக வடிகால் கட்டமைப்பை நிர்மாணிப்பதற்குமாக ஒரு வீட்டிற்கு 150,000 வீதம் அமைச்சுக்கு ஒதுக்கீடு செய்துள்ள நிதியின்; கீழ் பெற்றுக்கொடுத்து முதலீட்டை மேற்கொள்வதற்கும் அடிப்படை வசதிகளுடனான 5,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான மொத்த செலவில் 1.5 வீதம் அளவில் 86.25 மில்லியன் ரூபாவிற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான கட்டணமாக பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்திற்கு செலுத்துவதற்கும் அமைச்சரவையினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட வருடாந்த வரவு செலவு திட்ட மானிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பயன்படுத்துவதற்கும் மலையக புதிய கிராமம் அடிப்படை வசதி மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. பகிரங்க அரச பங்குடமையின் கீழ் பகிரங்க நேர்மை Open justice  பங்குடமை முறையாற்றி ஆரம்பிக்கும் அங்கத்தவர் என்ற ரீதியில் இலங்கையை உள்ளடக்குதல் (நிகழ்ச்சி நிரலில் 44 ஆவது விடயம்)

பகிரங்க அரச பங்குடமை அங்கத்தவர் என்ற ரீதியில் இலங்கையினால் தனது 2 வது பகிரங்க அரச பங்குடமை தொடர்பான தேசிய செயற்பாட்டுக்கான திட்டத்தை தற்பொழுது நடைமுறைப்படுத்துகின்றது. தமது நாடுகளின் பிரஜைகளின் நலனுக்காக நீதியான இயல்பான நிலையிலான சட்ட துறையில் மறுசீரமைப்புக்களை நடைமுறைப்படுத்தும் அங்கத்துவ நாடுகளுக்கு உள்ள ஆற்றலை மேம்படுத்தும் நோக்கத்துடன் பகிரங்க அரசு பங்குடைமை தொடர்பான செயலாளர் அலுவலகத்தினால் எதிர்காலத்தில் சமர்ப்பிக்கப்பட்டு பகிரங்க நீதி தொடர்பான பங்குடமைக்கு அமைய முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப பங்குடமை அங்கத்தவராக திகழ்வதற்கு அதன் செயலாளர் நாயகம் அலுவலகத்தினால் பகிரங்க அரச பங்குடமை தொடர்பாக இராஜதந்திர அழைப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இதன் பங்குடமை ஆரம்ப அங்கத்தவர் என்ற ரீதியில் இலங்கையை தொடர்புபடுத்துவதற்காக நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. போகம்பரை விளையாட்டு மைதானத்தில் புதிய செயற்கை ஓடுபாதை கட்டமைப்பொன்றை ஏற்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 46ஆவது விடயம்)

சுகததாச தேசிய விளையாட்டு கட்டமைப்பின் கீழ் நிர்வகிக்கப்படும் போகம்பரை விளையாட்டு மைதானம் மாகாண தேசிய விளையாட்டு வீரர்களின் மெய்வல்லுனர் விளையாட்டு பயிற்சியை மேற்கொள்வதற்கான முக்கிய மத்திய நிலையமாகும். தற்பொழுது இலங்கையின் செயற்கை ஓடு பாதையுடனான 2 விளையாட்டு மைதானங்கள் இருப்பதுடன் அவை கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ளன. மக்கள் தொகையில் ஆகக் குறைந்தது குத்துயரத்துடனான அனைத்து மாகாண வீரர்களுக்கும் இலகுவில் நெருங்கக்கூடிய போகம்பரை விளையாட்டு மைதானத்திற்கென செயற்கை ஓடு பாதை அமைப்பது காலத்தின் தேவையாகும் என்பதினால் புதிய திட்டமாக இதனை மேற்கொள்வதற்காக தொலைத்தொடர்பு வெளிநாட்டு வேலைவாய்ப்பு விளையாட்டுத்துறை அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. 1973 ஆம் ஆண்டு இல 25 கீழான விளையாட்டு சட்டத்தில் 11 ஆவது சரத்திற்காக வழங்கப்பட்ட தொடர் கட்டளைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் (நிகழ்ச்சி நிரலில் 48 ஆவது விடயம்)

2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27 ஆம் திகதி அன்று இல 1990/23 என்ற அதிவிஷேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 2016 இல 1 இன் கீழான தேசிய விளையாட்டு சங்க கட்டளை மற்றும் 2017 பெப்ரவரி மாதம் 13ஆம் திகதியன்று மற்றும் இலக்கம் 2006/13 என்ற (திருத்த) கட்டளையில் மேலும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டமை 2018 ஜுன் மாதம் 18 ஆம் திகதியும் இலக்கம் 2128/8 இடையில் அதிவிசேட வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய போக்குக்கு அமைவாக சிறப்பான மற்றும் நீதியான என்ற ரீதியில் விளையாட்டு சங்க அதிகாரிகளுக்கான தெரிவு நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் தேசிய விளையாட்டு சங்கங்களின் நிர்வாகத்தை முறைப்படுத்தும் நோக்குடன் வெளியிடப்பட்டுள்ள 2019 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 18 ஆம் திகதி இல 2128/2 என்ற அதிவிஷேட வர்த்தமானி அறிவிப்புக்கும் பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்காக அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கென தொலைத்தொடர்பு வெளிநாட்டு வேலை வாய்ப்பு விளையாட்டு துறை அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 14. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்காக வெடி பொருட்களை கண்டறிந்து கொள்ளக்கூடிய திறனைக்கொண்டதும் பயணப்பொதிகளை பரிசோதிக்கும் எக்ஸ்ரே இயந்திரங்களையும் விநியோகித்தல், பொருத்துதல், வழங்குதல் (நிகழ்ச்சி நிரலில் 70ஆவது விடயம்)

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வெடி பொருட்களை கண்டறிந்து கொள்ளக்கூடிய 9 கட்டமைப்புக்களை விநியோகித்தல், பொருத்துதல், வழங்குதல் ஆகியவற்றிக்காக புறம்பான நிதியை வழங்குவதுடனாக வெடி பொருட்களை அறிந்து கொள்ளும் கட்டமைப்பை வழங்குவதற்காக பெறுகை வழிகாட்டிகளை கடைப்பிடித்து அது தொடர்பில் ஆற்றலைக் கொண்ட விநியோகஸ்த்தர்களிடமிருந்து கேள்வி மனுக்களை கோருவதற்காக போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து தொகுதியை வலுவூட்டுவதற்காக 2,000 பஸ்களை கொள்வனவு செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 71 ஆவது விடயம்)

பயணிகளுக்கு மிகவும் வசதியான தரமான போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து தொகுதிக்கு 2,000 பஸ்களை பயன்படுத்துவதற்காக உள்ளுர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்புகளை விடுத்து விருப்புக்கள் மற்றும் ஆலோசனைகளை கோருவதற்காக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16. முஸ்லிம் திருமணம் விவாகரத்து சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளல் (நிகழ்ச்சி நிரலில் 83ஆவது விடயம்)

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் திருமணம் மற்றும் விவாகரத்தை பதிவு செய்தல் தொடர்பில் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் மற்றும் அதற்கான திருத்தத்தின் மூலம் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. இந்த சட்டத்தில் சில விதிகளில் திருத்தம் செய்யப்படவேண்டும் என்று முஸ்லிம் சமூகம் மற்றும் மனித உரிமை பாதுகாப்பு செயல்பாட்டாளர்களினால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்கமைவாக திருமணம் செய்யப்பட வேண்டிய வயது பதிவு செய்யும் நடைமுறை மற்றும் திருமணம் செய்தலுக்கான விருப்பத்தை வெளிப்படுத்துவதற்கு அமைவாக விதிகள் முதலான விடயங்களில் திருத்தத்தை மேற்கொண்டு அதன் திருத்த சட்ட மூலத்திற்கான யாப்பு திருத்த சட்டமூலத்தை மேற்கொள்வதற்கு சட்டவரைவுக்கு அது தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக தபால் சேவை மற்றும் முஸ்லிம் மத அலுவல்கள் அமைச்சரும் நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சரும் சமர்ப்பித்த கூட்டு பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top