பொது இடத்தில் வார்த்தைப்
பிரயோகங்களால் மோதிக்கொண்ட
அமைச்சர் ரிசாட் - சார்ள்ஸ் எம்.பி

மன்னார் மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி கட்டுக்கரை குளத்திற்கு கீழான பிரதான குளங்களை அபிவிருத்தி செய்வதற்கான கலந்துரையாடல் மன்னார், முருங்கன் நீர்ப்பாசன திணைக்களத்தில் இன்று (26) நடைபெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் அழைப்பின் பேரில் இன்று மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்த விவசாய, கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் பி ஹரிசன், இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, அமைச்சின் உயரதிகாரிகள் இக்கலந்துரையாடலில் கலந்து  கொண்டனர்.

இதேவேளை, அமைச்சர் ரிசாட் பதியுதீனும் - சார்ள்ஸ் எம்.பி யும் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களால் மோதிக்கொண்டனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
 நீங்கள் என்னைப் பற்றி எப்போதும் தவறாக பேசிக்கொண்டிருக்கின்றீர்கள். நாடாளுமன்றத்திலும் என்னைப் பற்றி தவறானவற்றை கூறிவருகின்றீர்கள்.

பழைய முதிர்ச்சியான அரசியல்வாதிகள் எல்லாம் அமைதியாக இருக்கும் போது நீங்கள் எப்படி என்னைப் பற்றி பேச முடியும்.” என அமைச்சர் ரிசாட் பதியுதீன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனை நோக்கி கேட்டுள்ளார்.
மன்னாரில் இன்றையதினம் கமநல திணைக்களத்தின் நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

குறித்த நிகழ்வின்போது அமைச்சர் ரிசாட் பதியுதீன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோருக்கு இடையில் இப்படி வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரிவிக்கப்படுவதாவது,

மன்னார், உயிலங்குளம் பகுதியில் கமநல சேவைகள் நிலையத்தின் கட்டடம் ஒன்று இன்று (திங்கட்கிழமை) விவசாய மற்றும் மீன்பிடி அமைச்சர் ஹரிசன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வு கமநல சேவைகள் நிலையத்தின் நிகழ்வாக இருந்த போதும் குறித்த நிகழ்வினை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆதரவாளர்களே நடத்தியிருந்தனர்.

இதன்போது அமைச்சர் ரிசாட் பதியுதீனை முன்னுரிமைப்படுத்தும் வகையில் ஏற்பாட்டாளர்கள் செயற்பட்டனர். மேடையில் மொழிபெயர்ப்பு செய்து அறிவிப்பு செய்தவர் ஒன்றுக்கு பல தடவை தேசியத் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் என அடிக்கடி விழித்துக் கொண்டார்.


இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், அமைச்சர் ஹரிசனிடம் நீங்கள் பிரதம அதிதி என்பதால்த் தான் நான் இந்த நிகழ்விற்கு வருகை தந்தேன் என கூறியுள்ளார்.


இதன்போது குறுக்கிட்ட அமைச்சர் ரிசாட் பதியுதீன், “நீங்கள் என்னைப் பற்றி எப்போதும் தவறாக பேசிக்கொண்டிருக்கின்றீர்கள். நாடாளுமன்றத்திலும் என்னைப் பற்றி தவறானவற்றை கூறிவருகின்றீர்கள்.

பழைய முதிர்ச்சியான அரசியல்வாதிகள் எல்லாம் அமைதியாக இருக்கும் போது நீங்கள் எப்படி என்னைப் பற்றி பேச முடியும்.” என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனைப் பார்த்துக் கேட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top