கல்முனை ஆதார வைத்தியசாலை பள்ளிவாசலுக்குள்
தொழுபவர்கள் நனைகின்றார்கள்
திருத்துவதற்கு வைத்தியசாலை நிர்வாகம்
நிபந்தனை விதித்து தடுக்கின்றது
கல்முனை
ஆதார வைத்தியசாலையில்
உள்ள பள்ளிவாசலுக்குள்
தொழுபவர்கள் நனைகின்றார்கள் ஆனால் திருத்துவதற்கு வைத்தியசாலை
நிர்வாகம் நிபந்தனை
விதித்து தடுக்கின்றது
என கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே.எம்.ஏ. றஸ்ஸாக் ( ஜவாத்) தெரிவித்துள்ளார்.
கல்முனையில்
உள்ள வீட்டுத்திட்ட
மக்களை சந்தித்து
கலந்துரையாடிய பின்னர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும்
அவர் தனது
கருத்தில்
வடக்கும்
கிழக்கும் பிரிந்து
தான் காணப்பட
வேண்டும்.இதற்காக
தான் முன்னர்
இருந்த சிறிலங்கா
முஸ்லீம் காங்கிரஸ்
கட்சியில் இருந்து நான் விலகினேன்.ஆனால் அந்த
கட்சி வடக்கும்
கிழக்கும் சேர்க்க
வேண்டும் என
கூறியமையாகும்.
கரையோர
மாவட்டம் என
தந்துவிட்டு பிரதி அரச அதிபர் ஒருவரை
தந்து ஏமாற்ற
பார்க்கின்றார்கள்.வடக்கும் கிழக்கும்
சேர்ந்தால் எமது சந்ததி அழிந்து விடும்.வடக்கும் கிழக்கும்
பிரிந்திருத்தலே நன்று.
நான் கல்முனை பஸார் பள்ளிவாசல் தலைவராக உள்ளேன்.எமது பள்ளிவாசலுக்கு
கீழ் தான்
கல்முனை ஆதார
வைத்தியசாலையில் உள்ள பள்ளிவாசல் ஒன்று இருக்கின்றது.அந்த பள்ளிவாசலில்
உள்ளே ஒழுகின்றது.
அந்த பள்ளிக்கு
4 வருடங்களாக நிறப்பூச்சு பூச அனுமதிக்கிறார்களில்லை.
அங்கே
ஒரு கோவில்
சிறிதாகவே இருந்தது.ஆனால் இன்று
பாரிய கோயிலாக
மாறியுள்ளது.எமது பள்ளிக்கு ஏதாவது செய்ய
போனால் விடுகின்றார்கள்
இல்லை.இப்படியானவர்களுடன்
நாங்கள் வட
கிழக்கில் இணைந்து
வாழ வேண்டுமா
என்ற கேள்வி
எழுகின்றது என கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே.எம்.ஏ. றஸ்ஸாக் ( ஜவாத்) தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment