இலங்கை வழியாக பிரான்ஸ் செல்ல முயன்ற
ஈரானிய ஆண், பெண் கைது
போலி
கட்வுச்சீட்டுக்களை பயன்படுத்தி இலங்கை
வழியாக பிரான்ஸ்
செல்ல முயன்ற
ஈரானிய ஆண்
ஒருவரையும் பெண் ஒருவரையும் கைது செய்த,
காட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு மற்றும்
குடியகல்வு அதிகாரிகள் அவர்களை நாடு கடத்தவும்
நடவடிக்கை எடுத்துள்ளனர்.
துருக்கியின்
இஸ்தான்புல் நகரில் இருந்து 28 வயதான ஈரானிய
பெண்ணும், 18 வயது ஈரானிய ஆணும் நேற்று
துருக்கியில் இருந்து வருகைதந்த விமானம் ஒன்றின்
மூலம் இலங்கையை
வந்தடைந்தனர்.
சுற்றுலாப்
பயணிகள் எனக்
கூறி இலங்கைக்கு
வந்த இவர்கள்
தாம் இருவரும்
பிரெஞ்சுக்காரர்கள் என அதிகாரிகளிடம்
கூறியுள்ளனர்.
போலி
கட்வுச் சீட்டுக்களை
பயன்படுத்தி நாட்டில் சில காலம் தங்கியிருக்க
முயற்சித்த இவர்கள் போலி ஆவணங்களை காண்பித்து
அதிகாரிகளை தவறாக வழிநடத்த முயன்றுள்ளனர்.
இந்த
கட்வுச்சீட்டுக்களை அதிகாரிகள் கணினி
மூலம் பரிசோதித்தற்கு
அமைய சந்தேக
நபர்கள் இருவரும்
இன்டர்போலின் சிவப்பு தரவு பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளமை
தெரிய வந்துள்ளது.
இதன்
பின்னர் இந்த
தகவல் உடனடியாக
கொழும்பில் உள்ள சர்வதேச பொலிஸ் தகவல்
பணியகத்திற்கு அனுப்பப்பட்டதுடன், இவர்கள்
பயண்படுத்திய கட்வுச் சீட்டுக்கள் போலியானவை என்பதும்
தெரியவந்துள்ளது.
கட்வுச்
சீட்டுக்களை மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான
நிலையத்தில் உள்ள எல்லை கண்காணிப்பு பிரிவுக்கு
அனுப்பிய போது,
இவர்கள் பிரெஞ்
கட்வுச் சீட்டுக்களை
பயன்படுத்தியுள்ளமை உறுதியாகியுள்ளது.
விமான
நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை
அதிகாரிகள் இரு பயணிகளிடமும் பிரெஞ் கட்வுச்சீட்டுக்களை
வைத்திருந்தமைக்கான காரணத்தை கண்டறிய
தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.