கல்வி சேவையில் பிரிவு iii இற்கான
ஓய்வூதியத்தை பெறுவதற்கான அதிகாரம்
- கல்வி அமைச்சிற்கு
இலங்கை கல்வி நிர்வாக சேவை, இலங்கை ஆசிரியர் கல்வி சேவை மற்றும் இலங்கை அதிபர் சேவை ஆகிய மூன்று அதிகாரிகளுக்கு ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்வதற்கான அனுமதி தொடர்பில் தம்மிடம் இருந்த அதிகாரத்தை அரச சேவை ஆணைக்குழு கல்வி அமைச்சின் செயலாளருக்கு வழங்கியள்ளது.
அனைத்து கடித ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்படும் ஓய்வூதிய கடித ஆவணங்களும் அனுமதி வழங்கும் போது இடம்பெறும் சிரமங்கள் காரணமாக சில அதிகாரிகளுக்கு பல மாதங்கள் ஓய்வூதிய கொடுப்பனவை பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்படுவதாக அமைச்சிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகிலவிராஜ் காரியவசத்தின் ஆலேசனைக்கு அமைவாக அமைச்சின் அரச சேவை ஆணைக்கழுவினால் விடுக்கப்பட் கோரிக்கைக்கு அமைவாக இந்த அதிகாரம் மாற்றப்பட்டுள்ளது.
ஒழுக்கத்தை மதிக்கும் மற்றும் வேறு பிரச்சினைகளுடன் கூடிய அதிகாரிகள் தவிர்ந்த பொதுவான நடைமுறைகளின் கீழ் உரிய தினத்தில் ஓய்வூதியங்களை பெற்றுக்கொள்வதற்கு கோரியுள்ள அதிகாரிகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்குவதற்கு அமைச்சுக்கு அதிகாரம் கிடைத்துள்ளது.
ஓய்வூதியம் பெறுவதற்கு எதிர்பார்த்துள்ள அதிகாரிகள் 6 மாதத்திற்கு முன்னதாக தமது முழுமைப்படுத்திய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இந்த 3 சேவைகளிலும் உள்ள சுமார் 22,000 அதிகாரிகளுக்கு இதற்கு அமைவாக குறிப்பிட்ட தினத்தில் ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைப்பதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதே வேளை ஓய்வூதியத்தை பெறுவதற்கு எதிர்பார்த்துள்ள தேசிய பாடசாலை ஆசிரியர்களும் , மாகாண பாடசாலை ஆசிரியர்களும் தமது ஒய்வூதியத்துக்காக விண்ணப்பத்தை மாகாண கல்வி அலுவலகத்திற்;கு சமர்ப்பிக்க வேண்டும். முழுமைப்படுத்தப்பட்ட விண்ணப்பத்தை 6 மாத காலத்திற்கு முன்னர் அந்த அலுவலகத்திற்கு சமர்ப்பிப்தன் மூலம் தாமதம் இன்றி உரிய தினத்தில் ஓய்வூதிய சம்பளத்தை பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என்று கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment