கொழும்பில் பேர வாவி
படகுச் சேவை ஆரம்பம்
கொழும்பு
நகரில் நிலவும்
வாகன நெருக்கடிக்கு
தீர்வு காணும்
வகையில் முதற்கட்டமாக
யூனியன் பிளேஸிலிருந்து
கொழும்பு கோட்டை
வரை பேர
(Beira Lake) வாவி படகுச் சேவை
பிரதமர் ரணில்
விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று
(22) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
தற்போது
கொழும்பு கோட்டையிலிருந்து
யூனியன் பிளேசுக்கு
பஸ் மூலம்
செல்வதற்கு 30நிமிடங்கள் எடுக்கும் அதேவேளை பிரயாணிகள்
படகு சேவை
மூலம் 9அல்லது
10நிமிடங்களில் அப் பயணத்தை நிறைவு செய்ய
முடியும்.
இந்த திட்டத்தில் காணப்படும் முன்னேற்றத்தின் அடிப்படையில் படகின் மூலமான பயணிகள் போக்குவரத்து சேவையை மேலும் விரிவுபடுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த திட்டத்தின் வெற்றிக்கு அமைவாக வெள்ளவத்தையில் இருந்து பத்ரமுல்லை வரையிலும் மட்டக்குளியில் இருந்து ஹங்வெல்ல வரையிலும், மட்டக்குளியில் இருந்து நீர்கொழும்பு வரையிலும் பயணிகளுக்காக படகு போக்குவரத்து சேவையை ஆரம்பிக்கக்கூடியாதாக இருக்கும் என்றும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்க்கு மென்ரயில் திட்மொன்றும் ஆரம்பிப்பதற்க்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த
பேர வாவி
படகுச் சேவை
அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க
ரனவக்க, சாகல
ரத்நாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி,
கடற்படை தளபதி
அத்மிரால் பியல்
டி சில்வா
உள்ளடங்கலான அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும்
கலந்துக்கொண்டார்கள்.
இலங்கை
காணி அபிவிருத்தி
திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் இச்சேவையானது
முதல் மாதங்களில்
இலவசமாகவே மக்களிற்கு
வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.