20 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்

நோர்வுட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் ஓல்டன் பிரதான வீதியின் நோர்வுட் மேற்பிரிவு பகுதியில் வீதியை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் கார் ஒன்று குடைசாய்ந்துள்ளதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (04) இரவு 10 மணியளவில் இடம்பெற்றள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஹட்டனில் இருந்து மஸ்கெலியா சாமிமலை பகுதியை நோக்கி அதிக வேகத்தில் பயணித்த காரின் சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

காரில் பயணித்த எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.  




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top