2019 ஜனாதிபதி தேர்தலுக்காக
கட்டுப்பணம் ஏற்கும் பணி
நாளையுடன் நிறைவு
2019 ஜனாதிபதி தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தும் பணி நாளையுடன் நிறைவடைகின்றது.
நாளை காலை 8.00 மணி தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரையில் கட்டுப்பணம் செலுத்த முடியும்.
5 ஆம் திகதியான இன்று கட்டுப்பணம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
ஜனாதிபதி தேர்லுக்காக கட்டுப்பணம் பொறுப்பேற்கும் பணி கடந்த 19 ஆம் திகதி ஆரம்பமானது.
நேற்று வரையில் 33 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆணைக்குழு கட்டுப்பணம் செலுத்தியவர்களின் விபரங்களை வெளியிட்டுள்ளது.




0 comments:
Post a Comment