சமையல் எரிவாயுவின் விலை
240 ரூபாவால் குறைப்பு


சமையல் எரிவாயுவின் விலை இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படுவதாக கைத்தொழில் மற்றும் வணிக அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 240 ரூபாவால் குறைக்கப்படுவதாக கைத்தொழில் மற்றும் வணிக அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 95 ரூபாவலும் மற்றும் 2.03 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 30 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது..

அதன்படி, புதிய விலை திருத்தத்திற்கு அமைவாக 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 1493 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.

5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 598 ரூபா எனவும், 2.03 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 289 ரூபா எனவும் கைத்தொழில் மற்றும் வணிக அலுவல்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் இந்த விலைத் திருத்தத்தை மீறி செயற்படும் விற்பனை நிலைய உரிமையாளர்களை தேடி சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ளுமாறு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top