மரணத்தை கட்டுப்படுத்தும் பாதுகாப்பான
தலைக்கவசத்தை கண்டுபிடித்த மாணவன்
சர்வதேச ரீதியில் சாதனை
சர்வதேச இளம் கண்டுபிடிப்பாளர்
போட்டியில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி மாணவன் கிருஷ்ணகுமார் முகேஷ் ராம் ( வயது
17) சர்வதேச ரீதியில் வெள்ளிப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
வெள்ளிப் பதக்கம் வென்ற மாணவன்
முகேஷ்ராமினை வரவேற்கும் நிகழ்வு கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் அதிபர் அருட்
சகோதரர் செபமாலை சந்தியாகு தலைமையில் இடம்பெற்றுள்ளது.
அதிகரித்து வரும் வீதி விபத்தினால்
ஏற்படும் மரணத்தை தவிர்க்கும் முகமாக இக் கண்டுபிடிப்பு அமைந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணம்
செய்யும் வேளை ஆள் நடமாற்றமற்ற , இரவு வேளைகளில் ஏற்படும் விபத்தின் போது போதிய முதலுதவி
இன்றி ஏற்படும் மரணத்தை கட்டுப்படுத்தும் பாதுகாப்பான தலைக்கவசத்தை (safety helmad
) ஐ கண்டுபிடித்ததற்காகவே மாணவன் முகேஷ்ராம் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
இவ்வாண்டு இந்தோனேஷியாவின்
தலைநகர் ஜகர்தா நகரில் இடம்பெற்ற 19 வயதிற்குட்பட்ட சர்வதேச புத்தாக்குனர் போட்டி கடந்த
9ம் திகதி தொடக்கம் 12ம் திகதி வரை நடைபெற்றுள்ளது.
சர்வதேச ரீதியில் 260 இளம்
கண்டுபிடிப்பாளர்கள் தமது ஆக்கங்களுடன் பங்குபற்றினர். இலங்கையிலிருந்து 12 இளம் கண்டுபிடிப்பாளர்களும்
கலந்து கொண்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் இருந்து கலந்துகொண்ட ஒரே ஒரு மாணவன் முகேஷ்
ராம் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment