நிந்தவூர்
பிரதேச செயலகத்தில் வாணி விழா தடை
உண்மைக்கு
புறம்பான செய்திக்கு
பிரதேச
செயலகம் வண்மையான கண்டணம்!!
நிந்தவூர் பிரதேச செயலகத்தில் வாணி விழா நாடாத்துவதற்கு
பிரதேச செயலாளர் தடை விதித்துள்ளார் என்ற கருத்தில் பல்வேறு ஊடகங்களிலும் சமூக
வலயதளங்களிலும் பரவிவரும் உண்மைக்கு புறம்பான செய்தியினை நிந்தவூர் பிரதேச
செயலாகம் மிக வண்மையாக கண்டிக்கின்றது.
இவ்வலுவலகத்தில் தமிழ் உத்தியோகத்தர்கள் கடமை புரிகின்ற
போதும் எந்தவொரு தமிழ் அலுவலகரும் வாணி விழா நடாத்த அனுமதி தருமாறு பிரதேச
செயலாளரிடத்திலோ ஏனைய பொறுப்பான அதிகாரியிடத்திலோ அனுமதி கோரியிருக்கவில்லை
என்பதோடு வாணி விழா நடாத்துவதற்கான எத்தகைய முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கவில்லை
அத்தோடு எமது அலுவலகத்தில் எத்தகைய மதம்சார் நிகழ்வுகளும் முக்கியத்துவம் கொடுத்து
நடாத்தப்படுவதுமில்லை. இங்கு கடமை புரியும் உத்தியோகத்தர்கள் தமது பண்டிகை
நிகழ்வுகளினை தொடர்ந்து அந்த சந்தோசத்தினை ஏனைய அலுவலர்களுடன் பகிர்ந்து கொள்ளும்
வகையில் உணவு,சிற்றுண்டிகளை
வழங்கி மகிழ்ச்சியுறும் நிகழ்வே காலகாலமாக மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
அத்தோடு வாணி விழா இவ்லுவலகத்தில் கடந்த காலங்களில் கொண்டாடப்படவும் இல்லை
என்பதையும் தகவலுக்காக அறியத்தருகிறோம்.(உறுதிப்படுத்த விரும்புபவர்கள் எமது
பிரதேச செயலகத்தில் தற்போது கடமை புரியும் மற்று ஏற்கனவே கடமை புரிந்த எந்தவொரு
தமிழ் அலுவலகரையும் தொடர்பு கொண்டும் உறிதிப்படுத்திக்கொள்ள முடியும்).
இனமத வேறுபாடுகளின்றி மிகவும் சகோதரத்துவத்தோடும்
ஒற்றுமையோடும் சகல உத்தியோகத்தர்களும் கடமையாற்றிவரும் இவ்வலுவலகத்தில் இன
முரண்பாட்டினை ஏற்படுத்தும் மோசமான நடவடிக்கையாகவே இச்செய்தியினை நாங்கள்
பார்க்கிறோம் எனவே இது தொடர்பில் விசாரித்து உண்மைத்தன்மையினை அறியாது செய்திகளை
பதிவிடுபவர்கள் அதனை பரிமாறுபவர்கள் இன நல்லுறவுக்கு குந்தகம் விளைவிக்கும்
இத்தகைய செயற்பாட்டிலிருந்து பூரணமாக தவிர்ந்து கொள்ளுமாறு பிரதேச செயலாளர்
கேட்டுள்ளார்.
0 comments:
Post a Comment