ஆடு, மாடுகளுக்கான பூங்காவாக மாறியிருக்கும்
மர்ஹும் அஷ்ரபின் பெயரில்
சிறார்களுக்கா நிர்மாணிக்கப்பட்ட  பூங்கா

மர்ஹும் அஷ்ரபின் பெயரில் சாய்ந்தமருதில் சிறுவர்களுக்கான பூங்கா என அரைகுறையாக நிர்மாணித்து, இந்த பூங்கா இங்குள்ள சிறார்களுக்கு முழுமையாக பிரயோசனமளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமல்  கால் நடைகளான ஆடுகள், மாடுகளுக்கு மேய்ச்சல் இடமாகவும் தங்குமிடமாகவும் அஷ்ரபின் பாசறையில் வளர்ந்த வாரிசுகள் எனக் கூறிக்கொள்பவர்களால் இடமளித்திருப்பது குறித்து  இப்பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த பூங்காவை நாளாந்தம் சுத்தப்படுத்தி அழகாக வைத்திருப்பதற்கும் கால்நடைகளை பூங்காவுக்குள் நுழையவிடாமல் தடுப்பதற்கும் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள வைக்கப்பட்டுள்ள இடங்களில் நிழல் வசதிகளை ஏற்படுத்துவதற்கும் மரக்கன்றுகளை நடுவதற்கும் கல்முனை மாநகர சபையினரால் நடவடிக்கை எடுக்க முடியாதா? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ந்த பூங்கா சாய்ந்தமருதில்தானே உள்ளது அந்த பூங்கா எக்கேடு கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று கல்முனை மாநகர சபை நிர்வாகம் உதாசீனப்படுத்துகின்றதா? என்றும் மக்கள் சிந்தித்து கேள்வி எழுப்புகின்றனர்.








0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top