மஹபொல உயர் கல்வி புலமைப்பரிசில்
பரிசளிப்புகல்வி ஆண்டு 2012/2013
13000 மாணவர்கள் கொழும்புக்கு அழைப்பு!
வைபவத்திற்கு சமுகமளிக்காவிடின்
பெயர் பதியப்படமாட்டாது என்பதுடன்
எதிர்காலத்தில் புலமைப்பரிசில் தொடர்பான
எவ்வித சலுகைகளும்
பெறமுடியாதிருக்கும்
எனவும் தெரிவிப்பு
2012/2013
கல்வியாண்டிற்காக மஹபொல புலமைப்பரிசில்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான சான்றிதழும்
காசோலையும் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 2014.12.02 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பு-5,
“ஷாலிகா விளையாட்டு மைதானம், பார்க் வீதி, நாரஹன்பிட்டியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இப்
பரிசளிப்பு வைபவம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
புலமைப்
பரிசில்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் புலமைப் பரிசில்களைப் பெற்றுக் கொள்வதற்கு
இத் தினத்தில் நேரில் வருதல் வேண்டும் என்றும். இவ் வைபவத்திற்கு சமுகமளிக்காவிடின்
உங்களின் பெயர் பதியப்படமாட்டாது என்பதுடன் எதிர்காலத்தில் புலமைப்பரிசில் தொடர்பான
எவ்வித சலுகைகளும் பெறமுடியாதிருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் எனவும்
தெரிவிக்கப்பட்டிக்கின்றது.
மஹபொல
உயர்கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியத்தின் பணிப்பாளர் ரஞ்சித் தேனுவர ஒப்பமிட்டு
அனுப்பப்பட்டுள்ள இக்கடிதத்தில் இவ்வாறு மாணவர்களை கொழும்புக்கு அழைத்திருப்பது குறித்தும்
வைபவத்திற்கு சமுகமளிக்காவிடின் உங்களின் பெயர் பதியப்படமாட்டாது என்பதுடன் எதிர்காலத்தில்
புலமைப்பரிசில் தொடர்பான எவ்வித சலுகைகளும் பெறமுடியாதிருக்கும் என்பதைக் கவனத்தில்
கொள்ளுதல் வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருப்பது குறித்தும் மாணவர்களும் பெற்றோர்களும்
கவலை தெரிவிக்கின்றனர்.
தற்போது
நாட்டில் காலநிலை சீரற்றிரும் நிலையில் கொழும்புக்கு செல்வதில் ஏற்படும் கஸ்ட நிலையைக்
கூறும் பெற்றோர் கஸ்டமான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களால் எப்படி பெரும்
தொகை பணம் செலவு செய்து கொழும்பு நகருக்கு செல்ல முடியும்? எங்கிருந்து இப்பணத்தை எங்களால்
பெற்றுக்கொள்ள முடியும்? வறிய மாணவர்களுக்கு மஹபொல புலமைப்பரிசில் வழங்குவதை கொழும்பில்
பாரிய நிகழ்வாக ஏற்படுத்தி அங்கும் அரசியல் பேச முற்படுவதா? எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.