ஜனாதிபதித் தேர்தலும்,

முஸ்லிம்களின்மனோநிலையும்

Sato Mansoor


1978 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் கொண்டு வந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை அந்த அரசியல் சாசனத்தின் தந்தை முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனா சாசனத்தை உருவாக்கிவிட்டு குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசியல் சாசனத்தின் மூலம் ஒரு ஆணை பெண்ணாகவும்,பெண்ணை ஆணாகவும் கொண்டுவர முடியாது மற்றெல்லாம் முடியுமென்றார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட எந்த ஜனாதிபதியும் தனது இரண்டு தடவைக்கான எந்தத் தேர்தலிலும் தோற்கடிக்கப்படவில்லை.
நீதி,நிருவாகம்,நிறைவேற்று அதிகாரம் என்ற மூன்று துறைகளும் ஜனாதிபதியிடமுள்ளது.
அப்படியானால் எதிர்க்கட்சி வேட்பாளரால் வெற்றிபெற முடியாதா? முடியாது என்பது எனது வாதம்...!!!
கடந்த 1978 ஆம் ஆண்டு தொடக்கம் 1988 ஆம் ஆண்டு வரை ஜே.ஆர்.ஜயவர்த்தனா ஜனாதிபதியாகவிருந்தார்.
அவரைத் தொடர்ந்து ஆர்.பிரேமதாஸ மரணிக்கும் வரை ஜனாதிபதியாகவிருந்தார்.
1994 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தோற்கடிக்கப்பட்டு அதன் பின்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிக்கா பண்டார நாயக்க,காமினி திஸாநாயக்க ஆகிய புதிய இரண்டு வேட்பாளர்களும் களத்துக்கு வந்து காமினி திஸாநாயக்க படுகொலை செய்யப்பட்டு அவரது மனைவி முகம் கொடுத்த தேர்தலில் சந்திரிக்கா பண்டார நாயக்க வெற்றி பெற்றார்.
1999 ஆம் ஆண்டு மீண்டும் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது தடவை சந்திரிக்காவே வெற்றி பெற்றார்.
2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ,ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவருக்குமிடையில் நடைபெற்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவோடு ரணில் விக்கிரம சிங்க வட-கிழக்கில வெற்றிபெற்றும் தென்னிலங்கை மக்களால் மஹிந்த ராஜபக்ஸ ஒன்றரை இலட்சம் வாக்குகளால் வெற்றி பெறுகிறார்.
2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,மக்கள் விடுதலை முன்னணி,தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்னும் பல கட்சிகள் ஒன்று சேர்ந்து அரசாங்கத்தின் இராணுவத் தளபதியை உடைத்தெடுத்து வட-கிழக்கு முழுதும் சரத் பொன்சேகா வெற்றி பெற்றும் தென்னிலங்கை மக்களால் 20 இலட்சம் வாக்குகளால் மஹிந்த ராஜபக்ஸ வெற்றி பெற்றார்.
விசேடமாக 2005,2010 ஆகிய தேர்தல்களில் சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவளிக்கவில்லை என்பது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம்.
ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தென்னிலங்கை சிங்கள பெரும் தேசியவாதத்திடம் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளன???
20 இலட்சத்தால் வெற்றி பெற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை மைத்தரிபால சிறிசேன,ராஜித சேனாரத்ன இன்னும் சென்றுள்ளவர்களின் மொத்த வாக்கு கூட்டிக்கழித்துப் பார்த்தால் மூன்று இலட்சம் வாக்குகளை குறைத்துள்ளது அவ்வளவுதான்.
சந்திரிக்கா,மைத்திரி அணி,ஐக்கிய தேசியக் கட்சி,மக்கள் விடுதலை முன்னணி,இன்னும் பல கட்சிகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு,முஸ்லிம் காங்கிரஸ் உட்பட கைகோர்த்தாலும் கடந்த 2010 ஆண்டு நடைபெற்ற தேர்தல் முடிவுகள் மாதிரித்தான் இருக்கும்...!!!
தென்னிலங்கை மக்கள் மத்தியில் என்ன மாற்றம் நடந்துள்ளன??? குறிப்பாக மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியின் செயலாளராகவும்,சுகாதார அமைச்சராகவும் இருந்தவர் இவர் முஸ்லிம் சமூகம் எதிர் கொண்ட பிரச்சனைகளின் போது இவரது வகிபாகமென்ன?
இவரை ஆதரிப்பது மஹிந்தவின் மேலுள்ள கோபமா?
அல்லது முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய,எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுத் தந்தவரா? தருவாரா?
சந்தரிக்கா அவரது குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி என்பதால் எதிர்க்கிறார்...!!!
மைத்தரிபால சிறிசேன தனக்கு பிரதமர் பதவி தரவில்லை என்பதற்காக எதிர்க்கிறார்...!!!
எதிர்க்கட்சிகள் தங்களது வழமையான செயற்பாடு அது...
முஸ்லிம் சமூகமும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் எதிர்த்தால் ஜனாதிபதி மஹிந்தவை மாற்ற முடியுமா???
அப்படியானால் தொடர்ந்து வட-கிழக்குக்கு வெளியிலுள்ள முஸ்லிம்கள் முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க் கட்சி வேட்பாளரைத்தானே ஆதரித்தார்கள் ஏன் தோற்கடிக்க,மாற்ற முடியவில்லை???
தென்னிலங்கை சிங்கள சமூகத்தின் வரலாற்றில் துட்டகெமுனு மன்னனுக்கு நிகராக மஹிந்த ராஜபக்ஸ மக்களின் மனங்களில் நாட்டை ஒன்றுபடுத்தி,பயங்கரவாத்தை ஒழித்து ஆழப்பதிந்துள்ளார்.
இது ஒரு சிங்களத் தேசியவாதியாக மாறி சிந்தித்துப் பார்த்தால்தான் மாற்று சமூகங்களுக்கு விளங்கும்...!!!
அப்படியானால் முஸ்லிம் சமூகம் எதிர் கொண்டுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வுகள்தான் என்ன???
ஏன் இந்தப் பிரச்சனைகள் ஏற்பட்டன???
வட-கிழக்குக்கு வெளியிலுள்ள முஸ்லிம்களும்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் இந்த அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்த 80 வீதம் வாக்களிக்கவில்லை...!!! ஆதரவளிக்கவில்லை...!!!
அரசாங்கத்திற்கு முஸ்லிம் சமூகத்தின் மேலும்,முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மேலும் நம்பிக்கை இல்லை...!!!அதனால்தான் இந்தப்பாரிய பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன...!!!
இதற்கு மாற்று வழிகள்தான் என்ன???
முஸ்லிம் சமூகமும்,முஸ்லிம் காங்கிரஸூம் 2005,2010 ஜனாதிபதித் தேர்தல்களில் 80 வீதம் எதிர்த்து வாக்களித்துள்ளோம்...!!!???
இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் நமது சமூகத்தின் கோரிக்கைகளை வைத்து உடன்பாடுகள் கண்டு முஸ்லிம் சமூகமும்,முஸ்லிம் காங்கிரஸூம் வெற்றிபெறப் போகும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களை ஆதரிப்பதுதான் முஸ்லிம் சமூகத்தின் இருப்பையும்,பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும்...!!!??? இதுவே எனது சமூகத்தின் மீது ஆழமாகக் கொண்டுள்ள அன்பின் வெளிப்பாடு...

\அப்படி தேவை இல்லை என்போர் தெளிவான பொருத்தமான வாதப்பிரதிவாதங்களை நாகரிகமாக முன் வையுங்கள்...!!!??

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top