விடுதலை செய்யப்பட்ட
5 தமிழக மீனவர்களுடன்
இந்தியத் தூதர் சந்திப்பு
சிறையில்
இருந்து விடுதலை
செய்யப்பட்ட 5 தமிழக மீனவர்களையும், இந்தியத் தூதர்
ஒய்.கே.
சின்ஹா சந்தித்துப்
பேசினார். இதுகுறித்து
அவர் தெரிவிக்கையில்,
"5 பேரையும் விரைவில் தாயகத்துக்கு பத்திரமாக திருப்பி
அனுப்புவதற்கான நடவடிக்கையை இந்தியத் தூதரகம் எடுத்து
வருகிறது' என்று
தெரிவித்துள்ளார்.
குடியேற்றத்
துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட 5 பேரையும்,
இந்தியத் தூதரகம்
தனது பொறுப்பில்
எடுத்துக் கொண்டுவிட்டதாக
இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக வட்டாரத்
தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்தியாவுக்கு
திரும்புவதற்குத் தேவையான ஆவணங்கள் கொடுக்கப்பட்ட பிறகு,
5 பேரும் இன்று
வியாழக்கிழமை அல்லது நாளை வெள்ளிக்கிழமை நாடு
திரும்புவார்கள் என்றும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன.
இந்தியா,
இலங்கை உள்ளிட்ட
8 நாடுகள் அங்கம்
வகிக்கும், சார்க் எனப்படும் தெற்காசிய ஒத்துழைப்பு
அமைப்பின் மாநாடு,
நேபாளத்தில் விரைவில் தொடங்க இருக்கிறது. இதில்,
பிரதமர் நரேந்திர
மோடியும், ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஸவும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்தச்
சூழ்நிலையில், 5 தமிழக மீனவர்களையும் இலங்கை விடுதலை
செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment