ஜனாதிபதித் தேர்தல் ஆதரவு விடயத்தில்

முஸ்லிம்களின் தனித்துவமான கட்சி என்ற அந்தஸ்தைப் பெறும்
முஸ்லிம் காங்கிரஸினது வழிகாட்டல் ஆரோக்கியமானது..!!


ஜனாதிபதித் தேர்தல் மிகக் குறுகிய காலத்தினுள் நடாத்தப் படலாம் என எதிர் பார்க்கப்படும் இவ் வேளையில் சிறு  பான்மையினரின் வாக்குகளே ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறும் என பலரும் ஆரூடம் தெரிவித்து வருகின்றனர்.பெரும்பான்மையினக் கட்சிகளின் பார்வை முஸ்லிம்களின் பக்கம் வெகுவாகவே திரும்பியுள்ளது.ஊவா மாகாண சபைத் தேர்தலில் புத்துணர்ச்சி பெற்ற .தே. ஊவா மாகாண சபைத் தேர்தல் முடிந்த மறுகணமே அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களிடத்தில் .தே. இனது முக்கிய புள்ளியாக மிளிரும்  உறுப்பினர்கள்  சிலைரை அனுப்பி பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது.ஜனாதிபதி என்றும் இல்லாதது போன்று முஸ்லிம்களின் மீது கரிசனை கொண்டு இலங்கை முஸ்லிம்கள்  அனைவரும் ஒரு முறையாவது ஹஜ் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு இட்டுள்ளார்.
இலங்கையில் தேசிய காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்,தேசிய ஐக்கிய முன்னணி  போன்ற முஸ்லிம் தலைமைகள் தலைமை தாங்குகின்ற பல கட்சிகள் உள்ள போதும் இக் கட்சிகளினை  யாரும் கணக்கு எடுத்ததாகவே தெரியவில்லை.யாவரினதும் பார்வை முஸ்லிம் காங்கிரஸின் பக்கமே திரும்பியுள்ளமை மு.கா முஸ்லிம்களின் தனித்துவமான கட்சி முஸ்லிம் காங்கிஸே என்பதை உலகிற்கு பறைசாட்டி நிற்கிறது.
மேலே குறிப்பிட்ட அத்தனை கட்சிகளும் ஜனாதிபதித் தேர்தலில் யாரைத் தாங்கள் ஆதரிப்பது என்பதை முடிவாக்கி பயணிப்பதும் மு.கா இனது பக்கம் பலரினதும் பார்வைகள் திரும்ப காரணம் எனலாம்.அரசியலைப் பொறுத்த மட்டில் யாரும் நிரந்தர எதிரியும் அல்ல நண்பனும் அல்ல என்ற போக்கே ஆரோக்கியமானது.ஒரு கட்சியைத் தீர்மானித்து நடைபயில்வது அவ்வளவு ஆரோக்கியமானது அல்ல.இன்று தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான ஆட்சியில் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பது என்னவோ உண்மைதான்.ஆனால்,ஜாதிக ஹெல உறுமய என்ற இனவாத கட்சி அரசாங்கத்தை விட்டு மாற எத்தனிப்பதும் சிந்திக்க வேண்டிய ஒன்றல்லவா? ஏன் சில வேளை பொது பல சேனா பொது வேட்பாளர் பக்கம் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
இவ்வாறு நிலைமை இருக்க எமது ஆதரவை தற்போது எவ்வாறு ஒரு பக்கம் காட்டுவது ஆரோக்கியமானதல்ல.
மேலும்,தமிழ் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பலத்தை விட பல மடங்கு பலமிக்கது என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை.தற்போதைய ஜனாதிபதியை அது ஒரு போதும் ஏற்கப் போவதில்லை அதன் தற்போதைய போக்கின் தெளிவான வெளிப்பாடு.ஜனாதிபதித்தேர்தலில் தான் ஒரு வேட்பாளரைக் களமிறக்குமா?என்ற யூகம் பலரிடையே எழுகின்ற போதும் அது நடைமுறைக்குச் சாத்தியமான ஒன்றல்ல என்பதனால் பொது வேட்பாளரையே ஆதரிக்கப் போகிறது.தமிழ் தேசியக் கூட்டமைப்பு தங்களை ஆதரிக்கும்,எதிர்க்கும் என்பது தெளிவானதன் விளைவாய்   தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தல் விடயத்தில் ஒரு பேசு பொருளாகவே இல்லை.
ஆனால், தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட பலம் குறைந்த முஸ்லிம் காங்கிரஸோ தனது கோரிக்கைகளை அரசிடமும் எதிர்க்கட்சிகளிடமும் முன் வைக்கும் ஒரு மிகப் பெரிய பேரம் பேசல் சக்தியைப் பெற்றுள்ளது.
எனவே.மு.கா இனது வழி காட்டல் ஆரோக்கியமானது என்பதில் ஐயமில்லை
துறையூர் .கே மிஸ்பாஹுல் ஹக்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top