உடலில் முடிக்கு பதிலாக
நகங்கள் முளைத்த பெண்
அமெரிக்காவில்
உள்ள பால்டிமோர்
பகுதியில் வசிக்கிறார்
32 வயது ஷானைனா
இசோம். கடந்த
ஐந்து ஆண்டு
களாக வித்தியாசமான
நோயால் அவதிப்பட்டுக்
கொண்டிருக்கிறார். தோலில் முடிகள்
முளைக்க வேண்டிய
இடங்களில் எல்லாம்
நகங்கள் முளைத்துள்ளன.
இந்த நோய்க்கான
சரியான காரணம்
இதுவரை கண்டறியப்படவில்லை.
ஆஸ்துமாவுக்காக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றபோது,
அளவுக்கு அதிகமான
ஸ்டீராய்ட் மருத்துகள் கொடுக்கப்பட் டிருக்கின்றன. அது
அலர்ஜியாக மாறி,
தோலில் கடுமையான
அரிப்பை உண்டாக்கியிருக்கிறது.
அரிப்பைத் தடுக்க
மேலும் சில
மருந்துகள் கொடுக்கப்பட்டபோது, நிலைமை இன்னும் மோசமாகி
விட்டது.
முடிகளுக்குப்
பதிலாக நகங்கள்
உடல் முழுவதும்
முளைத்துவிட்டன. கால்கள் இரண்டும் கறுப்பாகிவிட்டன. அவரது பார்க்கும் திறன் குறைந்துவிட்டது.
எலும்புகள் வலுவிழந்துவிட்டன. உடல் எடையும் வேகமாகக்
குறைந்து வருகிறது.
மருத்துவச் செலவு அதிகமாகிக் கொண்டே செல்கிறது.
ஒரு மில்லியன்
டாலர் மருத்துவமனைக்குக்
கொடுக்க வேண்டியிருக்கிறது.
மாதத்துக்கு 25 ஆயிரம் டாலர் செலவாகிறது. மகளுக்காக
வேலையைவிட்டுவிட்ட அவரது அம்மாவால்
சமாளிக்க இயலவில்லை.
ஷானைனாவுக்காக நிதி திரட்டி வருகிறார்கள். ஆனால்
அந்த நிதியை
விட மருத்துவச்
செலவு அதிகமாகிறது
என்பதுதான் வருத்தமான விஷயம்.
0 comments:
Post a Comment