முஸ்லிம் காங்கிரஸின்
ஒரு வார கால அவகாசம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.   ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவினை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் சில கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கும் இடையில் திடீர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.    இதன் போது கடந்த கால தேர்தல்களின் போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.  
இந்த சந்திப்பின் போது அமைச்சர்களான அனுரபிரியதர்சன யாப்பாபசில் ராஜபக்ஸ, டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட ஆளும் கட்சி முக்கியஸ்தர்கள் பங்கேற்றிருந்தனர் என முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் எம்.ரி. ஹஸன் அலி தெரிவித்துள்ளார்.  
முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கைகளுக்கு ஒரு வார காலத்தில் தீர்வு வழங்கப்படும் எனவும், அமைச்சர்கள் இந்த கோரிக்கைகள் குறித்து கவனம் செலுத்துவார்கள் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸஉறுதியளித்தார் என ஹஸன் அலி குறிப்பிட்டுள்ளார்.

இச்சந்திப்பின்போது கல்முனை மேயர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பரும் கலந்து கொண்டார். இவர் ஜனாதிபதியின் சந்திப்பின்போது நீல நிறச் சேர்ட் அணிந்து கொண்டு சென்றிருந்தார்.
இவர்கள் மூவரும்  ஜனாதிபதியைப் பார்த்து அழகாக சிரிப்பதைப் பார்க்கும்போது  முஸ்லிம் சமூகத்திற்கான கோரிக்கைகளை சரியாக முன் வைத்திருப்பார்களா? கடந்த காலத்தில் முஸ்லிம்களுக்கும் பள்ளிவாசல்களிலும் இடம்பெற்ற மறக்கமுடியாத கசப்பான சம்பவங்களையும் நிச்சயமாக எடுத்துக் கூறியிருப்பார்களா? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top