25 மாவட்ட நாணயத்தில் முஸ்லிம்கள் புறக்கணிப்பு
– முஸ்லிம் கவுன்ஸில்
சகல
மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில்
மத்திய வங்கியினால்
நேற்று வெளியிடப்பட்ட
25 பத்து
ரூபா நாணயக் குற்றிகளில் இலங்கை முஸ்லிம்களை
அடையாளப்படுத்தும் எதுவும் வெளியிடப்படாமையானது,
இந்நாட்டிலுள்ள முஸ்லிம்களைக் கவலை கொள்ளச் செய்துள்ளதாக
ஸ்ரீ லங்கா
முஸ்லிம் கவுன்ஸில்
தலைவர் என்.எம். அமீன்
தெரிவித்துள்ளார்.
மத்திய
வங்கியினால் நேற்று வெளியிடப்பட்ட25 மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும்
10 ரூபா நாணயக்
குற்றிகளில் இலங்கையிலுள்ள சகல சமூகங்களினதும் சமயத்
தலங்கள் தனியாக
பதிக்கப்பட்டுள்ளன. இலங்கை முஸ்லிம்கள்
அதில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக
அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு
நாணயங்களை வெளியிட்டு
வைத்துள்ளமை உண்மையில் சிறப்பான ஓர் அம்சமாகும்.
இந்த நாணயங்களில்
முஸ்லிம்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டார்களா?
அல்லது வேறு
காரணங்கள் இருக்கின்றதா
என்பதை முஸ்லிம்
சமூகத்தின் அரசியல் தலைமைகள் கேட்கக் கடமைப்பட்டுள்ளனர்.
நாணய
வெளியீடு என்பது
வரலாற்று சிறப்பு
மிக்க ஒரு
நிகழ்வாகும். இதில் 25 மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாணயங்களில் முஸ்லிம்களின்
சமயச் சின்னமொன்றையாவது
தனியாக பதிக்க
முன்வராமையானது குறிப்பிட்டுக் காட்டப்படவேண்டிய
ஒரு அம்சமாகும்.
இதுபோன்ற தவறுகள்
எதிர்வரும் காலங்களில் நடைபெறாமல் நடவடிக்கை எடுப்பது
எமது அரசியல்
தலைமைகளின் பொறுப்பாகும் எனவும் அவர் மேலும்
சுட்டிக்காட்டினார்.
0 comments:
Post a Comment