இலங்கையிலிருந்து கடல் வழியாக
தங்கக்கட்டி
கடத்தியவர்கள் கைது
தங்கமும் காரும் பறிமுதல்
இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு சுமார்
18.5 கிலோகிராம் எடையுடைய தங்கக்கட்டிகளை கடத்தியவர்களை, தமிழ்நாடு
திருத்துறைப்பூண்டியில் வைத்து இந்திய மத்திய வருவாய் புலனாய்வு துறையினர்
நேற்று 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.
இறைவரித்திணைக்களத்தின்
விசேடப்பிரிவு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வேதாரண்யம்,
திருத்துறைப்பூண்டிக்கு செல்லும் வழியிலுள்ள
கத்திமேடு பிரதேசத்தில்
வைத்து, சந்தேக
நபர்களின் காரை
வழிமறித்து சோதனையிட்ட போதே இவர்கள் கைது
செய்யப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்படுகின்றது.
குறித்த காரையும்
அதனுள்; இருந்த
தங்கக்கட்டிகளையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இலங்கையிலிருந்து
கடல் வழியாக
கொண்டு வந்து,
பின்னர் சென்னைக்கு
சாலை மார்க்கமாக
தங்க கட்டிகளை
கடத்தி செல்வது
விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடத்தி வரப்பட்ட தங்கம் 18.5 கிலோ
எடை இருந்தது.
அதனை கடத்தி
வந்த வேதாரண்யம்
கோடியக்காடு பகுதியைச் சேர்ந்த துரை என்கிற
அண்ணாதுரை(35), வேதாரண்யம் தெற்கு வீதியைச் சேர்ந்த
தியாகப்பன்(35) ஆகிய 2 பேரையும் கைது செய்து,
கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இது
தொடர்பான மேலதிக
விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment