இஸ்லாமாபாத் சிறுவன்
ஒருவன்
குழியில் தவறி விழுந்து மரணம்
பாதுகாப்பு வேலிகள்
அமைக்கப்படாததைக்
கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்
இஸ்லாமாபாத்
சுனாமி வீட்டுத்திட்டத்தைச்
சேர்ந்த சிறுவன் ஒருவன் சுமார் 06 அடி ஆழமான குழியில் தவறி விழுந்து
உயிரிழந்துள்ளான்.
லியாகத்
அலி முகம்மது நுபையில் (வயது
13) என்ற சிறுவனே
இவ்வாறு குழியில் தவறி விழுந்து மரணமானர்
என அறிவிக்கப்படுகின்றது.
தற்போது
மழை பெய்துவருகின்ற
நிலையில், கழிவுநீர்
சேகரிப்புக்காக கல்முனை மாநகரசபையால் வெட்டப்பட்டிருந்த இந்தக் குழியில்; மழைநீர்;
நிரம்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று
27 ஆம் திகதி வியாழக்கிழமை மாலையிலிருந்து இந்தச் சிறுவன்
காணாமல்
போனதாகவும் இந்த நிலையில், சிறுவனை
பெற்றோர் தேடியபோது
மேற்படி குழியில்
இந்தச் சிறுவன்
சடலமாகக் காணப்பட்டதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது.
பிரேத
பரிசோதனைக்காக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில்
சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கழிவுநீர்
சேகரிப்புக்காக கல்முனை மாநகரசபையால் வெட்டப்பட்ட இந்தக்
குழியைச் சுற்றி
எந்தவித பாதுகாப்புத்
தடுப்புக்களும் அமைக்கப்படாதுள்ளதாகவும் பொதுமக்கள்
புகார் தெரிவித்துள்ளனர்.
இந்தச்
சம்பவம் தொடர்பில்
கல்முனை பொலிஸார்
விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை,
இஸ்லாமாபாத் கிராமத்தில் மாநகர சபையினால்
கட்டப்பட்டு வந்த குடியிருப்பாளர்களின் கழிவறை தொட்டி
எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படாமல் ஒப்பந்தக்காரரினால்
கவனிப்பாரற்று விடப்பட்டிருந்ததாகவும் .நேற்றிரவு பாதுகாப்பு
வேலிகள் அமைக்கப்படாத
கழிவறைக்காக கட்டப்பட்ட தொட்டியில் 13வயது சிறுவன்
பரிதாபமான நிலையில்
வீழ்ந்து மரணமடைந்துள்ளான்.இந்த விடையங்களை
கண்டித்து இஸ்லாமாபாத்
மக்களால் ஆர்ப்பாட்டம்
ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.
0 comments:
Post a Comment