புலமைப்பரிசில்
வெட்டுப்புள்ளி திங்கள்கிழமை
வெளியாகும்
- அமைச்சர் பந்துல குணவர்த்தன
வரவு
– செலவுத் திட்டத்தின் ஊடாக புலமைப்பரிசில் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதற்கேற்ப
குறைக்கப்பட்ட வெட்டுப்புள்ளிகளின் விபரங்கள் வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்று
பாராளுமன்ற வரவு – செலவுத்திட்ட குழு நிலை விவாதத்திற்காக கூடிய போது கல்வி அமைச்சின்
விசேட அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து பேசும் போதே அமைச்சர் மேற்கண்ட வாறு தெரிவித்தார்.
5
ஆம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரமாக அதிகரிக்கப்
பட்டுள்ளது. இதன் மூலம் சிங்கள மொழி மூல மாணவர்களின் வெட்டு ப்புள்ளி 163 இலிருந்து
157 ஆகவும் தமிழ் மொழி மூல மாணவர்களின் வெட்டுப்புள்ளி 157 இலிருந்து 152 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி
எதிர்வரும் திங்கட்கிழமை பரீட்சை திணைக்களம் சகல பாடசாலைகளுக்கும் வெட்டுப்புள்ளிகளை
அறிவிக்கவுள்ளதுடன், பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளத்திலும் வெளியிடப்படும் என்றும்
அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
புலமைப்பரிசில்
மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை 500 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 1500 ரூபாவாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
0 comments:
Post a Comment