முஸ்லிம் பெண்களின் கல்வியில்
கல்முனை ஸாஹிறாவின் பங்களிப்பு
( லதீபா நுஃமான் )
கல்முனை
ஸாஹிறா தேசியக்கல்லூரி
தனது வரலாற்றில்
64 ஆண்டுகளைக் கடந்து அகவை 65 இல்
கால் பதித்திருக்கும்
இவ்வேளையில்
, அது பல
சாதனைகளை நிலைநாட்டியுள்ளதனை
எண்ணி
பெருமைப்படுகின்றோம்.
1949 இல் கல்முனைக்குடி , சாய்ந்தமருது எனும்
இரு கிராமங்களிலும்
உள்ள பிள்ளைகளின்
கல்வியை இலக்காகக்
கொண்டு கனிஸ்ட
இடைநிலைப்பாடசாலையாக ஓலைக்குடிசையில் ஆரம்பிக்கப்பட்ட
இப்பாடசாலை தற்போது இலங்கையின் பல பிரதேசங்களையும்
சேர்ந்த மாணவர்கள்
தேடிவந்து கல்வி
கற்கும் இலங்கை
முஸ்லீம்களின் ஒரு தேசிய சொத்தாக ஓங்கி
, உயர்ந்து நிற்கின்றது. இன்று இக்கல்லூரியின் கல்வி
, இணைப்பாடவிதான செயற்பாடுகள் , பலராலும் சிலாகித்துக் கூறப்பட்டும்
, பாராட்டப்பட்டும் வருகின்றன.
எனினும்
பாடசாலையின் பெண்கல்விக்கான பங்களிப்பு கவனத்திற் கொள்ளப்படாததது
கவலைக்குரிய விடயமாகும். கடந்த 30 வருடங்களாக கல்முனை
ஸாஹிறா தேசியக்கல்லூரி
ஆண்கள் மட்டும்
கல்வி கற்கும்
கல்லூரியாகவே இயங்கி வருகின்றது. இதனால் ஸாஹிறாவில்
பெண்களும் கல்வி
கற்றார்கள் என்பதே புதிய இளைய தலைமுறையினருக்கு
ஆச்சரியமாகவுள்ளது. எனவே பெண்கள்
கல்வியில் ஸாஹிறாவின்
பங்களிப்பு ஆவணப்படுத்தப்பட
வேண்டிய ஒரு
விடயமாக உணரப்படுகின்றது.
கனிஸ்ட
இடைநிலை பாடசாலையாக
ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையின் ஆரம்ப நாட்களில் பெண்
மாணவியர் கல்வி கற்க அனுமதியிருந்தும்
பெற்றோர்கள் தம் பிள்ளைகளை இப்பாடசாலைக்கு அனுப்ப
தயக்கம் காட்டினார்கள்.
இதற்கு ஒரு
காரணம் பெற்றோர்கள்
தமது வளர்ந்த
பெண் பிள்ளைகளை ஆண் மாணவர்களுடன் சேர்ந்து
கல்வி கற்க
அனுமதிக்காமை அல்லது விரும்பாமையாகும். அத்துடன் கல்முனைக்குடி
, சாய்ந்தமருது ஆகிய இரு ஊர்களிலும்
இரு பெண்பாடசாலைகள்
இயங்கிவந்தமையும் அதற்கான இன்னுமொரு காரணமுமாகும். எனினும்
காலப்போக்கில் இப்பாடசாலையை அண்மிய இடங்களில் வசித்த
பெண் பிள்ளைகள்
முதலில் இங்கு
சேரந்து கல்வி
கற்கத் தொடங்கினார்கள்.
இதன்படி
1951 இல் முதன்முறையாக
எஸ்.எல்.உதுமானாச்சி என்பவர்
இப்பாடசாலைக்கு அனுமதிக்கப்பட்டு தனது கல்வியினைத் தொடர்ந்தார்.
இவர் இங்கு
கல்வி கற்றதன்
காரணமாக இப்பிரதேசத்தின்
ஆரம்பகால ஆசிரியர்களுள்
ஒருவராக கடமைபுரிந்து
தற்போது ஓய்வு
பெற்றுள்ளார். இவரைத் தொடர்ந்து இன்னும் பல
பெற்றோர்கள் தமது பெண் பிள்ளைகளை இப்
பாடசாலைக்கு அனுப்பி கல்வி கற்பித்தனர்.கல்வியின்
பால் நாட்டம்
கொண்ட இப்பெண்கள்
க.பொ.த.சாதாரணதரம்
வரை கல்வி
கற்று தேறினார்கள்.
இவர்களுள் பலர்
ஆசிரியர்களாகவும் அதிபர்களாகவும் கடமையாற்றியுள்ளனர்.தற்போதும் கடமையாற்றியும்
வருகின்றனர். இவர்களுள் பௌஸியா அலியார் , ஆமினா
யுசுப் , நபீஸா
மீராசாஹிப் , ஸக்கீயா ஹமீட் போன்றோரும் அடங்குவார்கள்.
முதன்
முதலில் இலங்கை
முஸ்லீம்களின் வரலாற்றில் பெண் உயர்நீதிமன்ற நீதிபதியாக
பணிபுரிந்து எமது பிரதேசத்திற்கு பெருமை தேடித்தந்த
ஏ.எல்.மைமூனா அஹமட்
இக்கல்லூரியிலேயே க.பொ.த.சாராதரணதரம்
வரை கல்வி
பயின்றவராவார். இந்த வரிசையில் 1967 இற்கு முன்
அனுமதி பெற்று
தமது கல்வியனைத்
தொடர்ந்து 1970 களில் க.பொ.த.சாதாரணதரப் பரீட்சைக்கு
தோற்றி சித்தியடைந்த
இளைய தலைமுறையிளருள்
தற்போது கல்முனை
மஹ்மூத் மகளிர்
கல்லூரியில் பணிபுரியும் நூர்ஜஹான் முகைதீன் சலீம்
என்பவரும் ஆசிரியையாக
சேவை புரியும்
தையுபா நவாஸ்
என்பவர்களும் அடங்குவர்.
எவ்வாறிருந்த
போதிலும் 1967 வரை இகல்லூரியில் கல்வி கற்ற
மாணவிகளின் தொகை நூற்றினை தாண்டவில்லை. ஆனால்
1968 இலிருந்து 1983 வரையிலான கால
கட்டத்தில் பெண்மாணவிகளின் சேர்வில் பாரிய அதிகரிப்பு
ஏற்பட்டதுடன் பெண் கல்விக்கான ஸாஹிறாவின் பங்களிப்பு
முக்கியத்துவம் பெறலாயிற்று. இப்பங்களிப்பினை
இரு கட்டங்களாக
நாம் நோக்கலாம்.
பொதுக்கல்விக்கான பங்களிப்பு
1967 இல் கல்முனைப் பிரதேசத்தில் ஏற்பட்ட
இனக்கலவரத்தை் தொடர்ந்து கல்முனைக்குடி மற்றும் சாய்ந்தமருது
பிரதுசங்களிலுள்ள பாடசாலைகளில் கற்பித்த தமிழ் ஆசிரியர்கள்
முஸ்லிம் பிரதேசங்களுக்குள்
வந்து கற்பிக்கத்
தயங்கி வேறிடங்களுக்கு
மாற்றலாகிச் சென்று விட்டனர். இதன் காரணமாக
முஸ்லிம் பாடசாலைகளில்
அதிலும் குறிப்பாக
பெண் பாடசாலைகளில்
கடுமையான ஆசிரியர்
பற்றாக்குறை உருவாகி , அப்பாடசாலைகளில் கற்ற மாணவியர்
கல்வி கற்க
முடியாத ஒரு
நிலை தோன்றியது.அவ்வேளையில் பெற்றோர்
செய்வதறியாது திகைத்து நின்றனர். கல்முனை ஸாஹிறா
தேசியக்கல்லூரி அக்கால கட்டத்தில் அங்கு கற்பித்த
தமிழ் ஆசிரியர்களை
இழந்த போதிலும்
ஸாஹிறாவிற்கு வெளியில் கற்பித்த ஆண் ஆசிரியர்களினால்
அவ்விழப்புகள் ஈடுசெய்ப்பட்டன. இதனால் போதிய ஆசிரியர்
வளங்களை கல்முனை
ஸாஹிறா பெற்றுக்
கொண்டது. அத்துடன்
பெண்கள் கல்வியில்
ஏற்பட்ட இடைவெளியை
நிவர்த்தி செய்யும்
முகமாக அம்
மாணவிகளை
ஸாஹிறாவில் சேர்த்து கற்பிக்கும்
நடவடிக்கைகளில் அது ஈடுபட்டது.
இது
தொடர்பான தீர்மானமொன்று
பாடசாலையின் ஆசிரியர் சங்கக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதனைத்
தொடர்ந்து அப்போது
கல்லூரிக்கு அதிபராக கடமையாற்றிக் கொண்டிருந்த அல்ஹாஜ்
எஸ்.எச்.எம்.ஜெமீல்
தலைமையில் ஒரு
குழுவினர் ( எம்.ஐ.எஸ்.ஏ.கலீல் , எம்.ஐ.மீராசாஹிப்
, ஹாஸிம் , பீ.எம்.கமால்தீன் , எம்.ஐ.ஏ.அஸீஸ் ஆகியோருடன்
இன்னும் சிலர்
அந்த குழுவில்
அங்கம் வகித்தனர்)
கல்முனைக்குடி
, சாய்ந்தமருது கிராமங்களில் கல்வி கற்ற பெண்
பிள்ளைகளின் பெற்றோர்களை வீடு வீடாகச் சென்று
சந்தித்து நிலைமையினை
விளக்கி ஸாஹிறாவில்
அவர்களின் பெண்
பிள்ளைகளை கல்வி
கற்க அனுப்பி
வைக்கும்படி வேண்டிக் கொண்டனர்.
அப்போது
கல்முனை கார்மல்
மகளிர் கல்லூரி
, கல்முனை உவெஸ்லி
உயர்தரப் பாடசாலை
ஆகியவற்றில் கல்வி கற்றுக் கொண்டிருந்த பெண்
பிள்ளைகளின் பெற்றோர்களையும் இக்குழு சந்தித்தது. இதன்
பயனாக 1968 இல் முந்நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள்
புதிதாக சேர்த்துக்
கொள்ளப்பட்டனர். தொடர்ந்து வருடா வருடம் 1983 வரை
புதிதாக மாணவிகள்
அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறு சேர்த்துக்
கொள்ளப்பட்டவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர்
க.பொ.த.சாதாரணதரத்துடன்
தமது கல்வியினை
நிறுத்திக் கொண்டனர்.எனினும் அவர்களில் பலர்
ஆசிரியர் நியமனங்களையும்
வேறு தொழில்களையும்
பெற்றுக் கொண்டனர்.
இப்பிரதேசத்தில்
1970 களின் பிற்பகுதியிலும் 1980 களிலும்
நியமனம் பெற்ற
முஸ்லிம் பெண்
ஆசிரியர்களில் அரைவாசிக்கும்
மேற்பட்டோர் கல்முனை ஸாஹிறாவில் கல்வி கற்றவர்கள்
என்பது குறிப்பிடத்தக்க
விடயமாகும்.ஸாஹிறாவின் அதிபரினதும் ஆசிரியர் குழுவினரது
சமயோசிதமான இந்த நடவடிக்கையினால் தான்
மேற்படி நிலைமை
சாத்தியமாயிற்று.இவ்வாறு கல்விகற்ற ஒரு ஒரு
பரம்பரையின் உருவாக்கமானது பெண்கல்வியின்
ஒரு உறுதியான
அடித்தளத்தை வழங்கியது எனின் அது மிகையாகாது.
1971 இல் கல்முனைக்குடி , சாய்ந்தமருது ஆகிய
இரு ஊர்களிலுமிருந்த
பெண் பாடசாலை
மாணவிகளையும் அல் அமான் என்ற பெயரில்
இயங்கிவந்த ஆரம்ப பாடசாலை மாணவிகளையும் கொண்டு
கல்முனை மஹ்மூத்
மகளிர் கல்லூரி
என்ற பெயரில்
புதிய பெண்கள்
பாடசாலையொன்று உருவாக்கப்பட்டபோது கனிஸ்ட இடை நிலை
வகுப்புகளில்பெண் மாணவிகளின் புதிய வருகை நின்று
போய்விட்டது. எனினும் ஏற்கனவே ஸாஹிறாவில் சேர்ந்தவர்கள்
இப்பாடசாலையிலேயே தொடர்ந்தும் கல்வி கற்றனர். இவர்கள்
அதிபர்களாகவும் , ஆசிரியர்களாகவும் இன்னும் பல்வேறுபட்ட தொழைில்
புரிபவர்களாகவும் , கல்வி கற்ற
குடும்ப தலைவிகளாகவும்
இருந்து புதிய
சந்ததியினருக்கு வழிகாட்டுகின்றனர்.இவ்வகையில்
இவர்களின் கல்விக்கு
ஸாஹிறா ஆற்றிய பங்களிப்பு பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
உயர்கல்விக்கான பங்களிப்பு
பெண்களின்
உயர்கல்விக்கான ஸாஹிறாவின் பங்களிப்பானது மிகவும் பெருமைப்பட
வேண்டியதொரு விடயமாகும். கிழக்கு மாகாணப் பாடசாலையொன்றிலிருந்து
முதன்முதலாக ஒரு முஸ்லிம் மாணவியைப் பல்கலைக்கழகம்
பிரவேசிக்கச் செய்த பெருமை இப்பாடசாலையையே சாரும்.தொடர்ந்தும் சில
காலம் இப்பிரதேசத்தில்
பல உயர்கல்வி
முன்னோடிகளை இப்பாடசாலையே உருவாக்கியது.
1970 இற்கு முற்பட்ட காலத்தில் பொதுவாக
நாடளாவிய ரீதியில்
முஸ்லிம் பெண்பிள்ளைகள்
க.பொ.த. சாதாரணதரத்துடனேயே
தமது கல்வியை
முடித்துக் கொள்ளும் நிலைமையே காணப்பட்டது. விரல்விட்டு
எண்ணத்தக்க சிறு தொகையானவர்களே க.பொ.த.உயர்தரத்திலும்
அதற்கு மேலும்
கல்வி கற்றவர்களாக
காணப்பட்டனர். இக்கால கட்டத்தில் கிழக்கிலங்கை முஸ்லிம்
பெண்களுக்கு உயர்கல்வி கற்பதற்கான எதுவித வசதிகளும்
வாய்ப்புகளும் இருக்கவில்லை. பணம் படைத்த சிலர்
தமது பெண்
பிள்ளைகளை கொழும்பு
பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரி , யாழ்ப்பாணம்
சுண்ணடிக்குழி மகளிர் கல்லூரி , வேம்படி மகளிர்
கல்லூரி போன்ற
பாடசாலைகளுக்கு அனுப்பி உயர்தர வகுப்புவரை கல்வி
கற்பித்தனர். இவ்வேளையில் கிழக்கிலங்கையில்
ஒரு முஸ்லிம்
பாடசாலையான ஸாஹிறாக்கல்லூரியில்
உயர்தர வகுப்புகளில்
1960 களின் பிற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு
அவ்வாரம்ப காலமுதல்
பெண் பிள்ளைகளும்
உயர்தரம் கற்கக்கூடிய
வாய்ப்பு கிடைத்தமை
பெரும் பேறாகும்.
இப்பிரதேசத்தில்
தற்போது பிரபல
பாடசாலைகளாக விளங்கும் அக்கரைப்பற்று தேசிய பாடசாலை
, சம்மாந்துறை தேசிய பாடசாலை போன்றவற்றில்
பெண்கள் உயர்தரம்
கற்கும் நிலைமையும்
, பல்கலைக்கழகம் புகும் நிலைமையும் கல்முனை ஸாஹிறாவிற்கு
பின்பே உருவானது.
தவிரவும் நிந்தவுர்
அல் அஷ்ரக்
தேசிய பாடசாலை
, மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரி
போன்றவற்றில் பெண்கள் உயர்தரம் கற்கும் நிலைமை
கல்முனை ஸாஹிறாவிற்கு
ஒரு தசாப்த
காலம் பின்னரே
உருவாயிற்று. இந்த வகையிலும் கல்முனை ஸாஹிறா
தேசியக்கல்லூரி ஒரு எடுத்துக் காட்டான முன்னோடிப்
பாடசாலையாக தனது பங்களிப்பினை ஆற்றியுள்ளது.
கல்முனை
ஸாஹிறாவிலிருந்து 1968 இல் உயர்தரப்
பரீட்சைக்கு தோற்றிய முதலாவது குழுவில் ஒரு
மாணவியாக ஏ.எல்.வாரிதா
என்பவரும் தோற்றி
சித்தியடைந்தார்.எனினும் துரதிஸ்டவசமாக அவருக்கு பல்கலைக்கழக
அனுமதி கிடைக்கவில்லை.
இருந்த போதிலும்
அவர் பேராதெனிய
பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவியாக
சேர்ந்து கலைமாணிப்
பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். இவர் ஆசிரியராகவும்
கம்பளை ஸாஹிறாக்
கல்லூரிக்கு அதிபராக இருந்து ஓய்வுபெற்றுள்ளார். பெரும்பான்மையாக ஆண் பிள்ளைகள் கல்வி
பயில்வதும் ஆண் ஆசிரியர்களைக் கொண்டதுமான கம்பளை
ஸாஹிறாக் கல்லூரிக்கு
முஸ்லிம் பெண்ணொருவர்
அதிபராக கடமையாற்றுவதற்கான
அடிப்படைத் திறன்களையும் மனப்பாங்கினையும் கூட அவர் கல்முனை ஸாஹிறாக்
கல்லூரியில் கற்றதன் பயனாகப் பெற்றுக் கொண்டார்
என்பது கவனத்திற்
கொள்ளப்பட வேண்டிய
விடயமாகும்.
இவரைத்
தொடர்ந்து 1971 உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி
1972 இல் எம்.ஐ.எஸ்.எம்.லதீபா
என்பவரைக் கிழக்கிலங்கைப்
பாடசாலையொன்றிலிருந்து பல்கலைக்கழகம்
புகுந்த முதலாவது
முஸ்லிம் பெண்ணாக
பரிணமிக்கச் செய்த பெருமை கல்முனை ஸாஹிறாவிற்கே
உரித்தானதாகும்.அவர் பேரதெனிய பல்கலைக்கழகத்தில் கற்று 2 ஆம் வகுப்பு உயர்
பிரிவில் தேர்ச்சி
பெற்று பொதுக்கலைமாணி
பட்டத்தையும் , யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில்
பட்டப்பின் உயர் கல்வி டிப்ளோமா பட்டத்தையும்
( சிறப்பு
தேர்ச்சி) பெற்றுக்
கொண்டார். பின்னர்
தேசிய கல்வி
நிறுவகத்தில் கல்வி முதுமாணி பட்டத்தையும் பெற்றுக்
கொண்டார். ஆசிரியராகவும்
, கல்வியல் கல்லூரி சிரேஸ்ட விரிவுரையாளராகவும் பணி ஆற்றி பலநூறு ஆசிரியர்களின்
உருவாக்கத்திலும் பங்கெடுத்துக் கொண்டார். இவை யாவற்றிற்குமான
அடிப்படையை வழங்கியது கல்முனை ஸாஹிறாக் கல்லூரியேயாகும்.
அடுத்த
வருடம் ஜிப்ரித்
அஹமட் எனும்
மாணவி பல்கலைக்கழகப்
பிரவேசம் பெற்றார்.
இவர் வித்தியலங்காரப்
பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தையும்
, இலங்கை திறந்த
பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் உயர்
கல்வி டிப்ளோமா
பட்டத்தையும் பெற்று பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர்
கல்லூரியில் பிரதி அதிபராகவும் கடமை புரிந்தார்.இதனைத் தொடர்நத
வருடாவருடம் கலைத்துறையில் பெண் பிள்ளைகளைப் பல்கலைக்கழகத்திற்கு
அனுப்பி புகழ்
சேர்த்த கல்முனை
ஸாஹிறாத் தாய்
பிரபல வழக்கறிஞராக
கடமையாற்றும் பெரோஸா காலித் ( மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரபின் சகோதரி)
என்பவரையும் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி
பெருமை சேர்த்தது.
கல்முனை
ஸாஹிறாவிலிருந்து அதிகளவிலான பெண் மாணவிகள் தொடர்சியாக
பல்கலைக்கழகம் செல்வதனை அவதானித்த தமிழ்ப் பெற்றோர்கள்
உயர்தரம் கற்பதற்காக
கல்முனை ஸாஹிறாவிற்கு
அனுப்ப ஆரம்பித்தனர்.
இதனால் அதிகளவிலான
தமிழ் மாணவிகளும்
பல்கலைக்கழகம் செல்ல கல்முனை ஸாஹிறா வாய்ப்பளித்தது.
கலைத்துறையினைத்
தொடர்ந்து விஞ்ஞானத்
துறையில் வகுப்புகள்
ஆரம்பிக்கப்பட்டன. இதில் முஸ்லிம்
தமிழ் மாணவிகளும்
கல்வி கற்கத்
தொடங்கினார்கள் 1978 இல் முதன்முதலாக
இரு மாணவிகள்
பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்றனர்.
கல்முனைக்குடி , சாய்ந்தமருது பிரதேசத்தில் முதன்முதலாக இலங்கைப்பல்கலைக்கழக
விஞ்ஞான பீடத்திற்கு
பிரவேசம் பெற்ற
முஸ்லிம் பெண்
ஆவார். இவர்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானமானிப்
பட்டத்தைப் பெற்று ஆசிரியராக சிறிது காலம்
பணியாற்றிய பின்னர் தேசிய கல்வி நிறுவகத்தில்
பிரதம செயற்திட்ட
அதிகாரியாக பணி ஆற்றினார்.இவர் கொழும்பு
பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் உயர்கல்வி
டிப்ளோமா தேர்வில்
அதி சிறப்பு
தேர்ச்சி பெற்றார்.பின் இலங்கை திறந்த
பல்கலைக் கழகத்தில்
கல்வி முதுமாணிப்
பட்டத்தையும் ,, கொழும்பு பல்கலைக்கழகத்தில்
தத்துவமாணிப் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார். பின்னர்
அவுஸ்திரேலியாவின் நியுஇங்கிலாந்துப் பல்கலைக் கழகத்தில் புலமைப் பரிசில்
பெற்று கலாநிதிப்
பட்டத்தை புர்த்தி
செய்துள்ளார். தற்போது கனடாவில் ” வின்சர்” பல்கலைக்கழகத்துடன்
இணைந்து ஆய்வுகளை
மேற்கொண்டு வருகின்றார். இவரின் உயர்ச்சிக்கான அடிப்படையை
வழங்கியது கல்முனை
ஸாஹிறா எனின்
அது மிகையாகாது.
இவரைத்
தொடர்ந்து அடுத்த
வருடம் ஏ.மஹ்மூதா பீபி
என்ற மாணவி
உயிரியல் விஞ்ஞானத்
துறைக்கும் , ஏ.எல்.ஆமினா என்பவர்
முதன்முதலாக பௌதீக விஞ்ஞானத் துறைக்கும் பல்கலைக்கழக
அனுமதி பெற்றனர்.
இவர்கள் இருவரும்
விஞ்ஞானமாணிப் பட்டத்தையும் பின்னர் பின்னர் பட்டப்
பின் உயர்கல்வி
டிப்ளோமா பட்டத்தையும்
பெற்றுத் தற்போது
உயர்தர வகுப்புகளில்
கற்பிக்கும் நல்லாசிரியர்களாகப் பணிபுரிந்து
வருகின்றனர்.
1981 இல் ஏ.ஆர்.நிஜாமியா
எனும் மாணவி
மருத்துவ பீடத்திற்கு
பல்கலைக்கழக அனுமதி பெற்றார்.இவர் பேரதெனிய
பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துறையில் பட்டம் பெற்று தற்போது கல்முனைப்
பிரதேசத்தில் மருத்துவராக பணியாற்றி வருகின்றார்.இவரே
கல்முனைக்குடி , சாய்ந்தமருது பிரதேசத்தில் முதல் மருத்துவப்
பட்டம்பெற்ற பெண் ஆவார்.
இவ்வாறு
இப்பிரதேசத்தில் முஸ்லிம் பெண் பிள்ளைகளை கலை
, உயிரியல்விஞ்ஞானம் , பௌதீக விஞ்ஞானம்
மற்றும் மருத்துவத்துறைகளுக்கு
முதன் முதலில்
அனுப்பிய பெருமையும்
இக்கல்லூரியையே சாரும். தவிரவும் தொடர்ந்தும் இப்பிரிவுகளுக்கு
முஸ்லிம் மாணவிகளை
அனுப்பி வைக்கும்
வரலாறும் 1983 வரை தொடர்ந்தது.
1984 இல் இப்பாடசாலையில் இறுதியாக உயர்தரம்
கற்றவர் எம்.ஐ.எஸ்.எச்.ஸாஹிறா
என்ற மாணவியாகும்.
இவர் வர்த்தகப்
பிரிவில் உயர்தரப்
பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த போதிலும் பல்கலைக்கழக
அனுமதி கிடைக்கவில்லை.இவரும் சில
காலம் ஆசிரியையாக
பணி புரிந்தார்.
இவரைப் போன்று உயர்தரம்
சித்தியடைந்து பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத பல
பெண்களின் கல்விக்கும்
ஸாஹிறா தனது
பங்களிப்பைச் செய்துள்ளது. இவ்வாறு சித்தியடைந்த பெண்களே
1980 களில் ஆசிரியர் சேவையினைப் பெற்று இப்பிரதேசத்தில்
மாணவர்களுக்கு பெரும் சேவையாற்றினார்கள்.
இவ்வாறு
1967 தொடக்கம் இப்பிரதேசத்தில் உயர்கல்வி முன்னோடிகளையும் ,உயர்தரம் கற்ற தரமான ஆசிரியர்களையும்
இக்கல்லூரி தோற்றுவித்துள்ளது.
பெண்களின்
கல்வி முற்றுப்பெறக்கூடாது
என்று 1994 ஆம் ஆண்டு ஏ.எம்.ஹுசைன் அதிபராக
இருந்த காலத்தில்
மீண்டும் இக்கல்லூரியில்
ஆரம்ப பிரிவு
ஆரம்பிக்கப்பட்டு அதில் மாணவர்களும் மாணவிகளும் இணைக்கப்பட்டனர்.ஆனால் துரதிஸ்டவசமாக
தேசிய பாடசாலைகளில்
ஆரம்ப பிரிவு
இருக்கக்கூடாது என்ற கல்வியமைச்சின் சுற்று நிருபத்திற்கு
அமைய 1999 இல்
ஐந்தாம் ஆண்டு
சித்தியடைந்ததுடன் பெண் மாணவிகள்
கல்முனை மஹ்மூத்
மகளிர் கல்லூரிக்கு
ஆறாம் தரம்
கற்பதற்காக அனுப்பப்பட்டனர். அதன் பின்னர் 2010 ஆம்
ஆண்டு இக்கல்லூரியின்
முதல் பெண்
அதிபராக கடமையேற்ற
திருமதி மர்ஜுனா
ஏ காதர்
அவர்கள் மீண்டும்
ஆரம்ப பிரிவினை
ஆரம்பித்தார். ஆனால் இல்லூரி 1000 பாடசாலைகள் திட்டத்தின்
கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளதால்
2016 ஆம் ஆண்டுடன்
ஆரம்ப பிரிவை
மூடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதிலும் கணிசமான
எண்ணிக்கையில் பெண் மாணவிகள் கல்வி கற்கின்றார்கள்
அடுத்த வருடமும்
அதற்கடுத்த வருடமும் ஆறாம் தரத்தில் கல்வி
கற்பதற்காக இம்மாணவிகள் கல்முனை மஹ்மூத் மகளிர்
கல்லூரிக்கு சென்று விடுவார்கள்.
கல்முனை
ஸாஹிறாவினால் உருவாக்கப்பட்ட இம்முன்னோடி முஸ்லிம்
பெண்கள் இலங்கையின்
பல பாகங்களிலும்
கல்விச் சேவை
புரிகின்றனர். தேசிய எல்லைக்கு அப்பாலும் கல்விப்
பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த பங்களிப்புகளுக்கு
காரணகர்த்தாக்களாக அமைந்த அதிபர்கள்
, ஆசிரியர்கள் என்றென்றும் நினைவு கூர்ந்து போற்றப்பட
வேண்டியவர்கள்.
0 comments:
Post a Comment