நியூயார்க்கில் கடும் பனிக்கு 5 பேர் பலி
அவசரநிலை அறிவிப்பு

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று ஏற்பட்ட கடும் பனிப் பொழிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர் என அறிவிக்கப்படுகின்றது. அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க், நார்த் டகோடா, மினசோடா, விஸ்கான்சின், மிச்சிகன், ஒஹியோ மற்றும் பென்சில்வேனியா உட்பட பல பகுதிகளில் தற்போது பனி கடுமையாக பொழிகிறது. சில இடங்களில் இரவு நேரத்தில் வெப்பநிலை மைனஸ் 11 டிகிரி செல்சியஸாக உள்ளது. ஒரு மணி நேரத்துக்கு 13 செ.மீ அளவுக்கு பனி பொழிகிறது. நியூயார்க்கின் பவ்பலோ நகரில் 6 அடி உயரத்துக்கு பனி படர்ந்துள்ளது. இதனால் மக்கள் வெளியே வரமுடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
குளிர் தாங்க முடியாமல் நியூயார்க் நகரில் இதுவரை 5 பேர் பலியாகிவிட்டனர் என அறிவிக்கப்பட்டிருக்கிறதுசில இடங்களில் வாகனங்கள் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் நிலைமை மிகமோசமாக இருப்பதால், அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டு மீட்பு பணி நடக்கிறதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
A massive storm has dumped more than 5 feet of snow in upstate New York, trapping residents in their homes and stranding hundreds of motorists — and a women's college basketball team — on highways. The governor declared a state of emergency. Officials say at least five people have died as a result of the storm — one man who was found trapped in his car, another pinned underneath a car, and three from heart attacks while shoveling. Another 2 feet of snow is expected to fall on Thursday.









0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top