ஆச்சரியங்கள் நிறைந்திருக்கும்
ஆப்பிள் பழம்
விஞ்ஞானம்,
புவி ஈர்ப்பு
விசை கோட்பாடுகளின்
தொடக்கத்தை ஐசக் நியூட்டன் மூலம் உருவாக்குகிறது.
ஆங்கிலக் கல்வியின்
தொடக்கமும் ஆப்பிளில்தான். ஆரோக்கியத்தின்
அடையாளமாக ஆங்கில
மருத்துவம் சுட்டிக் காட்டுவதும் ஆப்பிளைத்தான். ஆக
ஆப்பிள் ஏதோ
ஒரு விதத்தில், நம் வாழ்வில் இன்றியமையாத
இடத்தைப் பிடித்திருக்கிறது.
ஆப்பிள்
முதன்முதலாக தோன்றியது எங்கே? என்பது குறித்து
உறுதியான தகவல்கள்
இல்லை. மத்திய
ஆசிய நாடுகளான
கஜகஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகியவற்றில் ஏதோ
ஒன்றிலோ அல்லது
சீனாவிலோ தோன்றியிருக்கலாம்
என கருதப்படுகிறது.
ஒரு சிலர்
ரோமில்தான் ஆப்பிள் தோன்றியது என்கிறார்கள். ஆனால்
மனிதர்களால் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு
முன்பிருந்தே, பயிர் செய்யப்பட்டு வந்த பழம்
என்பது பெரும்பான்மையான
ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்து.
தொல்லியல்
ஆய்வாளர்கள் சுவிட்சர்லாந்தில் கண்டு பிடித்த சில
தொன்மையான பொருட்களை,
விஞ்ஞான முறைப்படி
(கார்பன் டேட்டிங்)
சோதனை செய்தனர்.
அந்த ஆய்வில்,
'கிறிஸ்து தோன்றுவதற்கு
சில ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்னரே, ஸ்விஸ்-இன் ஆதிகுடி
மக்கள், ஆப்பிளை
உணவாக பயன்படுத்தியிருக்கலாம்'
எனத் தெரிவிக்கிறார்கள்.
ரோஸாசியே
எனப்படும் பூக்கும்
தாவர குடும்பத்தைச்
சார்ந்தது ஆப்பிள்
பழம். இதில்
உலகம் முழுக்க
7,000 பிரபலமான வகைகளும், மிக அரிதான 2,800 வகைகளும்
இருக்கின்றனவாம். ரெட் டெலிசியஸ், காலா, க்ரான்னி
ஸ்மித், கோல்டன்
டெலிசியஸ், பியூஜி, பிங்க் லேடி போன்றவை
குறிப்பிடத்தகுந்த சில வகைகள்.
அமெரிக்கர் ஒருவரின் சுவாரசியமான கண்டுபிடிப்புப்படி, நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு
வகை என,
தினமும் ஒரு
ஆப்பிள் சாப்பிட்டால்,
உலகம் முழுக்க
உள்ள ஆப்பிள்
வகைகளை சாப்பிட்டு
முடிக்க 27 வருடங்களும் மூன்று மாதங்களும் ஆகுமாம்.
'ரெட்
டெலிசியஸ்' பெருவில் முதன் முதலில் பயிரிடப்பட்ட
இனமாகும். 1872-ம் ஆண்டு முதல் அமெரிக்காவின்
பிரபலமான ஆப்பிள்
வகை இது.
சிவப்பு நிறமாக
இருக்கும் இவற்றின்
தோல், சற்று
கடினமானது. உலகில் உள்ள ஆப்பிள்களில் இதுதான்
மிகச் சுவையானது
எனக் கருதப்படுகிறது.
'காலா'
என்னும் வகை
கனடாவில் கண்டறியப்பட்டது.
மெலிதான தோல்,
சிவந்த தோலில்
பச்சை, மஞ்சள்
மற்றும் வெள்ளை
நிறங்கள் திட்டுத்திட்டாக
காணப்படும்.
'கோல்டன்
டெலிசியஸ்' வகை ஆப்பிள்கள், அமெரிக்காவின் மேற்கு
வெர்ஜினியாவில் உருவாக்கப்பட்ட இனமாகும். இது பொன்
நிறத்தில் இருக்கும்.
பொதுவாக ஆப்பிள்களை
அரிந்து வைத்தால்,
'பெர்ரஸ் ஆக்ஸைட்'
என்னும் வேதிப்பொருள்
'பெர்ரிக் ஆக்ஸைடாக'
மாறுவதனால் விரைவில் பிரவுன் நிறத்துக்கு மாறிவிடும்.
ஆனால் 'கோல்டன்
டெலிசியஸ்' வகை ஆப்பிள்கள் அவ்வளவு சீக்கிரத்தில்
மாறாது. சாலட்,
இனிப்பு சாஸ்
தயாரிக்க இந்த
வகை ஏற்றது.
'பியூஜி'
ஜப்பானின் கண்டுபிடிப்பு.
இளஞ்சிவப்பு நிறத்தில் அளவில் மிகப் பெரியதாக
இருக்கும் இவை,
குறைந்த அளவு
இனிப்பு சுவை
கொண்டது. அமிலத்தன்மையும்
மிகக்குறைவு. எனவே இதனை சமையலுக்கு பயன்படுத்துவார்கள்.
'க்ரான்னி
ஸ்மித்' ஆஸ்திரேலியாவைச்
சார்ந்த 'மேரி
ஆன் ஸ்மித்'
என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
பச்சை நிறத்தில்
காணப்படும் இந்த வகை ஆப்பிள்கள், வருடம்
முழுவதும் காய்க்கும்
தன்மை கொண்டவை.
(பெரும்பாலானவை இரண்டு அல்லது மூன்று மாதங்கள்
மட்டுமே காய்க்கும்).
தோல் தடித்திருக்கும்.
உள்ளிருக்கும் சதைப் பகுதியும் கடினமாக இருக்கும்.
நீண்ட நாள்
வைத்திருக்கலாம். சாஸ், சாலட், சமையலுக்கு என
பலவிதங்களில் இதனை பயன்படுத்தலாம்.
'பிங்க்
லேடி' வகை
ஆப்பிள்களும் ஆஸ்திரேலியாவின் கண்டுபிடிப்புதான்.
ஆப்பிள்கள் வளர குளிர் பிரதேசங்கள்தான் ஏதுவானவை.
ஆனால் 'பிங்க்
லேடி' வெப்பமான
இடங்களிலும் வளரக்கூடியவை. மிதமான அளவு, ரோஜா
வண்ணத்தில் காணப்படும். இன்னும் விசித்திரமான, வித்தியாசமான
பல வகைகள்
உள்ளன. ஆப்பிளைப்பற்றி
மட்டும் படிப்பதற்காக
'போமாலஜி' என்ற
அறிவியல் பிரிவு
ஒன்று இருக்கிறது
என்றால், எத்தனை
விரிவான கடல்,
ஆப்பிளுக்குள் ஒளிந்திருக்கிறது என்பதை உணரமுடியும்.
கஜகஸ்தான்
நாட்டில் உள்ள
ஆப்பிள் காடுகள்
நிறைந்த ‘அல்மாட்டி'
நகரத்தின் பெயருக்கு
பொருள் ‘ஆப்பிள்களின்
தந்தை' என்பதாகும்.
ஒரு காலத்தில்
டென்மார்க், ஸ்வீடன் போன்ற ஐரோப்பிய நாடுகள்
சிலவற்றில், ஆசிரியர்களுக்கு மிகக்குறைவான
ஊதியமே வழங்கப்பட்டதாம்.
மாணவர்களின் பெற்றோர், கூடை கூடையாய் ஆப்பிள்
கொடுத்து அதை
ஈடு செய்தனராம்.
ஆசிரியர்களின் ஊதியம் உயர்த்தப்பட்ட பின்னும், ஆப்பிள்
ஒன்றை கெளரவப்
பரிசாகக் கருதி
பெற்றோர்கள் தருவது இன்றைக்கும் வழக்கத்தில் இருக்கிறதாம்.
ஆப்பிள்
செடி தனியாக
வளரக்கூடிய தன்மை குறைவானது. தனக்கு அருகில்
இன்னொரு ஆப்பிள்
செடி இருந்தால்
நிறைய காய்க்கவும்,
நீண்ட நாள்
உயிர்த்திருக்கவும் செய்யுமாம். எனவே
இரண்டிரண்டாகத்தான் நடுவார்கள். அதோடு
தேனீக்கள் அருகில்
இருந்தால்தான் இனப்பெருக்கமும் நடக்குமாம்.
அதனால் அமெரிக்காவில்
ஆப்பிள் செடி
வாங்கினால், கூடவே தேனீக்கள் வளரும் சூழலும்
இருக்குமாறு பார்த்துக் கொள்வார்கள். ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும்
பேணும் தன்மை
ஆப்பிளுக்கு இயல்பாக உண்டு என்பதை இதன்மூலம்
உணரலாம். அதனால்தானோ
என்னவோ ஆப்பிளுக்கு
சீன மொழியில்
'பிங்' என்று
பெயர். அதன்
பொருள் அமைதி.
சீன புத்தாண்டு
அன்று ஆப்பிளை
மற்றவர்களுக்குத் தருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். யூதர்களுக்கும்
இந்த பழக்கம்
உண்டு.
பழகிய
மனிதர்களுக்கு பழங்களைத் தருவது பழங்காலந் தொட்டு
மனிதர்களின் வழக்கம்தான். சக மனிதர்களின் மீதான
பற்றுதலை அது
காண்பிக்கிறது. அற்புதங்கள் நிறைந்த ஆப்பிளை நாம்
பிறருக்குத் தருவது அன்பின் பரிமாற்றம் மட்டுமல்ல,
ஆரோக்கியத்தின் பறைசாற்றலும் கூட...
'தினமும்
ஒரு ஆப்பிள்
சாப்பிட்டால் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்லை'
என்பது ஆங்கிலப்
பழமொழி. கலோரிகளில்
குறைவானது ஆப்பிள்.
மேலும் கரைபடக்
கூடிய நார்ச்சத்துக்கள்
ஆப்பிள்களில் அதிகம் என்பதால், கொலஸ்ட்ராலைக் குறைக்கும்
ஆற்றல் பெற்றது.
ஆப்பிள்கள் ஒரு பெண்ணின் கருத்தரிக்கும் வாய்ப்பை
அதிகரிக்கும்.
ஆப்பிள்
பழத்தை, தொடர்ந்து
சாப்பிட்டு வந்தால் 'பார்கின்ஸன்' எனப்படும் வாதம்,
'அல்சைமர்' எனப்படும் மறதி நோய் வராது.
மூளைக்கு மிகுந்த
சக்தியளிக்கும் தன்மை ஆப்பிளுக்கு உண்டு. பல்
ஈறுகள் கெட்டிப்படும்
என்பதால், இரவு
படுப்பதற்கு முன் ஆப்பிள் சாப்பிடலாம். நரம்பு
பலவீனம் நிவர்த்தியாகும்.
இதய நோய்
பாதிப்பு, புற்றுநோய்
வராமல் தடுக்கும்.
ஆப்பிள் சாப்பிடுவதால்
உடலில் உள்ள
செல்கள் புதுப்பிக்கப்படுகின்றன.
0 comments:
Post a Comment