வங்கதேசத்தின்
முன்னாள் பிரதமர் காலிதா ஜியா
மீதான ஊழல் வழக்கு விசாரிக்கலாம்
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
வங்கதேசத்தின்
முன்னாள் பிரதமர்
காலிதா ஜியா
மீதான ஊழல்
வழக்கை சிறப்பு
நீதிமன்றம் விசாரிக்கலாம் என்று அந்நாட்டு உச்ச
நீதிமன்றம் நேற்று ஞாயிற்றுக்கிழமை
தீர்ப்பளித்தது.
இது
தொடர்பாக அவர்
தாக்கல் செய்த
மனுவை உயர்
நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு அமர்வு நிராகரித்தது.
முன்னதாக,
சிறப்பு விசாரணை
நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது
என்று அவரது
கோரிக்கையை, உயர் நீதிமன்றம் நிராகரித்திருந்தது. இதை எதிர்த்து காலிதா ஜியா
உச்ச நீதிமன்றத்தில்
மேல்முறையீடு செய்தார்.
இப்போது
உச்ச நீதிமன்றமும்
இந்த மனுவை
நிராகரித்ததையடுத்து, டாக்கா நகர
சிறப்பு நீதிமன்றத்தில்
ஊழல் வழக்கு
விசாரணை தொடர்ந்து
நடைபெறும்.
இதன்
பின்னணி: காலிதா
ஜியாவின் கணவர்
முன்னாள் அதிபர்
ஜியாவுர் ரகுமான்
பெயரிலான இரு
தொண்டு நிறுவனங்கள்,
பெயரளவில்தான் இயங்கி வந்தன. ஜியா அறக்கட்டளையிலிருந்து
சுமார் ரூ.
2.4 கோடியை அவர் கையாடல் செய்தார் என்ற
குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
ஜியாவுர்
ரகுமான் பெயரில்
இயங்கும் அநாதைக்
குழந்தைகள் பராமரிப்புக்கான அறக்கட்டளையின்
கணக்கிலிருந்து, ரூ. 1.66 கோடி கையாடல் செய்ததாக
வேறொரு குற்றச்சாட்டும்
காலிதா ஜியா
மீது சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான
வழக்கில் அவரது
மூத்த மகன்
தாரிக் ரகுமான்
மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
2001-2006 ஆண்டுகளில் காலிதா ஜியா பிரதமராக
இருந்தபோது, இந்த முறைகேடுகள் நடந்துள்ளன.
காலிதா
ஜியா மீது
சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபணமானால்,
அவருக்கு அதிகபட்சமாக,
ஆயுள் சிறைத்
தண்டனை கிடைக்க
வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.