நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கு
தடையுத்தரவு பிறப்பிக்க
கோரி மனு தாக்கல்
ஜனாதிபதி
தேர்தலுக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்க கோரி
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று நேற்றைய தினம்
தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேசிய சிங்கள பௌத்த
மக்கள் கட்சியின்
தலைவரான ரத்ன
பண்டாரவினால் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாட்டின்
அரசியலமைப்பை வேண்டுமென்று மீறியுள்ளார் என நீதிமன்றப்
பிரகடனம் செய்ய
வேண்டும். அத்துடன்
இந்த மனுவின்
தீர்ப்பு வரும்
வரையில் ஜனவரியில்
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பான எந்தவொரு
நடவடிக்கை மீதும்
தடையுத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்றும் கோரப்பட்டுள்ளது.
பொதுசன
அபிப்பிராய வாக்கெடுப்பு நடத்தாமல் 18ஆவது திருத்தத்தை
சட்டமாக்கதியதன் மூலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ
அரசியலமைப்பை மீறியுள்ளார். எனவே அவர்
மூன்றாம் முறை
ஜனாதிபதியாகும் தகுதியை மட்டுமல்லாது அவர் தற்போதைய
ஜனாதிபதி பதவியாக
இருக்கும் தகுதியை
இழந்துள்ளார். ஆகையால் அவரை பதவி நீக்கம்
செய்ய வேண்டுமென
மனுதாரர் கேட்டுள்ளார்.
அடுத்த
ஜனாதிபதியாக வருவதற்கு பொருத்தமானவரை நீதிமன்றமே அறிவிக்க
வேண்டுமெனவும் அவர் தனது மனுவில் கோரியுள்ளார்.
0 comments:
Post a Comment