அரச காலத்துப்
புலவராக
இன்று அஸ்வர் ஹாஜியார்
மக்கள் நண்பன் சம்மாந்துறை அன்சார்
ஜனாதிபதியின்
ஆலோசகராக இருக்கும்
அஸ்வர் அவர்களை
திட்டித் தீர்க்காத
வாய்களே இல்லை
என்றுதான் வெளிப்படையாக
சொல்ல வேண்டும்.
அந்த அளவுக்கு
முகநுால்வாயிலாகவும், இணையத்தள செய்திகள்
வாயிலாகவும் மக்களது உணர்ச்சிகளைப் பார்க்கும் போது
தெரிகின்றது.
இந்த
நாட்டில் வாழும்
ஒரு சிறுபாண்மையினத்தைச்
சேர்ந்த ஒருவரான
அஸ்வர் அவர்கள்,
ஜனாதிபதி அவர்களுக்கு
மிகவும் நெருக்கமானவர்,
வேண்டப்பட்டவர் மற்றும் ஆலோசகரும் கூட.
இப்படி
இருந்தும் முஸ்லிம்களுக்கு
எதிராக நடைபெறும்
இனத்துவேச நடவடிக்கைகளுக்கு
எதிராக அவர்
எந்த வித
நடவடிக்கைகளையும் ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டு
வராமையும், எச்சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி
அவர்களை யாருக்காகவும்
விட்டுக் கொடுக்காமையும்தான்
மக்கள் அவர்
மீது அதிர்ப்தி
கொள்ள காரணமாக
அமைகின்றன.
இனவாத
நடவடிக்கைகளை துாண்டும் குழுக்களுக்கு எதிராக அவர்
எந்த வித
கருத்துக்களையும் தெரிவிப்பதில்லை மாறாக அந்த குழுக்களுக்கெதிராக
தகுந்த நடவடிக்கை
எடுக்குமாறு அரசாங்கத்தை மக்கள் வேண்டினால் அந்த
மக்களை குற்றம்
கானுகின்றார், இது தொடர்பாக எந்த அரசியல்வாதியாவது
கருத்து தெரிவித்தால்
அவர்கள் மீது
சீறிப்பாய்கின்றார். இது பலரும்
அவர் மீது
அதிர்ப்தி கொள்ள
காரணமாகின்றது.
இவரது
செயற்பாட்டை நான் அவதானிக்கும் போது எனக்கும்
ஒரு விடயம்
ஞாபகத்துக்கு வருகின்றது.
அதாவது
நான் ஏ.எல் படிக்கும்
போது தமிழ்
பாடத்தில் இலக்கியங்களைப்
படித்திருக்கின்றேன் அதில் ”புலவர்கள்”
என்ற ஒரு
சாரார் இருக்கின்றனர்
அவர்கள் அந்த
காலத்து அரசர்களை
போற்றி புகழ்ந்து
கவிதை எழுதுவார்கள்,
அதனை அரச
சபையில் வாசித்துக்
காட்டி அரசனிடம்
இருந்து பரிசில்களும்
பெற்றுச் செல்வார்கள்.
அதே
அந்த அரச
காலத்துப் புலவர்களைத்தான்
நான் இன்று
அஸ்வர் ஹாஜியாரின்
உருவில் பார்க்கின்றேன்.
எமது
ஜனாதிபதி அவர்களது
பல செயற்பாடுகள்
பாராட்டுதலுக்கும், புகழுக்கும், பெருமைப்பட்டுக்
கொள்வதற்கும் ஏதுவாக அமைந்தாலும், இனவாத செயற்பாடுகளை
தோற்றுவிக்கும் குழுக்களுக்கு எதிராக அவர் மேற்கொள்ளும்
நடவடிக்கைகள் ஆமை வேகத்தில்தான் இருக்கின்றது என்பதை
அஸ்வர்கள் அவர்கள்
உணர்ந்து கொள்ள
வேண்டும்.
அண்மைக்காலமாக....இல்லை !!! இல்லை...!!!
வெகுகாலமாக அஸ்வர் ஹாஜியார் அவர்கள் எந்தவிதத்திலும்
சிறுபான்மை இன மக்களுக்காக குரல் கொடுத்ததே
இல்லை மாறாக
அவரது கருத்துக்கள்
அனைத்தும் அரசாங்கம்
செய்யும் அத்தனையும்
சரி சரி
சரி என்பதை
சுட்டிக் காட்டுவதாகவே
அமைகின்றது இவரது போக்கு அப்படியே இசைவாக்கம்
அடைந்து விட்டது.
இவரது
நோக்கு என்னவெனில்
அரசாங்கத்தில் இருந்து கொண்டு, அந்த அரச
சபையில் அமர்ந்து
கொண்டு, அந்த
அரசர்களையும், அமைச்சர்களையும் புகழ்பாடிக்
கொண்டு பரிசில்கள்
என்ற பெயரில்
ஏகபோக வாழ்க்கை
வாழ்வதுதான் இவரது நோக்கம் ஆகும், இதனைத்தான்
மக்களும் கூறிக்
கொண்டிருக்கின்றார்கள்.
மக்கள்
நண்பன்
சம்மாந்துறை
அன்சார்
இலங்கை.
0 comments:
Post a Comment