அரசியல்வாதியின் வாக்குறுதி
காற்றோடு காற்றாகவா...???
Nagoor Ariff
கல்முனை
சாஹிரா தேசிய
பாடசாலையின் பள்ளிவாசலின் தரைத்தோற்றத்தின்
தற்போதைய நிலையை
கீழுள்ள படங்களில்
காணலாம்.
கடந்த
புனித ரமழான்
மாதம் இந்தப்
பாடசாலையில் பழைய மாணவர் சங்கத்தினால் நடத்தப்பட்ட
இப்தார் நிகழ்வில்
கலந்து கொள்ள
வந்திருந்தவர்களில், இக்கல்லூரியின் பழைய
மாணவரும், அரசியல்வாதியுமான
ஒருவர், தான்
பள்ளிவாசலின் தரையை மாபிள்களைக் கொண்டு திருத்தித்
தருவதாக வாக்குறுதி
அளித்திருந்தார்.அவரின் இந்த வாக்குறுதி ஊடகங்களிலும்
வந்திருந்தது.எனினும், வாக்குறுதி அளித்து மாதங்கள்
பல கடந்தும்
இன்னும் இந்த
விடயம் நடப்பதற்கான
எந்த அறிகுறியும்
இல்லை என்பதுடன்,
அவர் தற்போது
கையை விரித்துவிட்டதாகவும்
தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே,
பள்ளிவாசலின் தற்போதைய தரையின் நிலையை பாடசாலையின்
பழைய மாணவர்களின்
கவனத்திற்கு விடுகின்றேன்.
இதேவேளை
கடந்த 2014.05.17 ஆம் திகதி ”மக்கள் விருப்பம்” – (MAKKAL VIRUPPAM) http://makkalviruppam.blogspot.com
பிரசுரமான செய்தியை மீண்டும் இங்கு பதிவேற்றுகின்றோம்.
கல்முனை ஸாஹிறா பள்ளிவாசலின் தரை ஓடுகள்
சீராகப் பொருத்தாததால் தரை சீரழிந்து பல இலட்சம் சேதம்!
பணமும் பொருளும் வீணாகிப் போயுள்ளது குறித்து மக்கள் கவலை!!!!
![]() |
பள்ளிவாசலின் தரை ஓடுகள்,
முறையற்ற விதத்தில் பொருத்தப்பட்டதன் காரணமாக,
அவற்றில் பெரும்பாலான தரை ஓடுகள் கழண்ட வண்ணம்
உள்ளன. இவற்றில் சில தரை ஓடுகள் உடைந்தும் காணப்படுகின்றன. தரையின் அவல நிலையைப் படங்களில் காணலாம்.
கல்முனை
ஸாஹிறா தேசிய
பாடசாலை வளாகத்தில்
அமையப்பெற்றுள்ள பள்ளிவாசலின் தரை ஓடுகள், முறையற்ற
விதத்தில் பொருத்தப்பட்டதன்
காரணமாக, அவற்றில்
பெரும்பாலான தரை ஓடுகள் கழண்ட வண்ணம்
உள்ளன. இவற்றில்
சில தரை
ஓடுகள் உடைந்தும்
காணப்படுகின்றன.
புதிதாக
நிர்மாணிக்கப்பட்ட இப்பள்ளிவாசலானது இவ்வாறு காணப்படுவதால், இதைப் பயன்படுத்தும்
மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் அன்றாட
தொழுகையில் ஈடுபடுவதற்கு பெரும் சிரமப்படுகின்றனர். ரமழான் மாதம் நெருங்கி வரும்
நிலையில் இதனை
விரைவாக செப்பனிட
வேண்டியுள்ளது.
நன்மை
கருதி மக்களால்
பள்ளிவாசலுக்கு வழங்கப்பட்ட பணம் சரியாகப் பாவிக்கப்படாமல்
இவ்வாறு முறையற்ற
விதத்தில் கருமமாற்றி
வீணடிக்கப்பட்டிருக்கிறதே என மக்களால்
கவலை தெரிவிக்கப்படுகின்றது
5/17/14 10:48 PM
Pacific Standard Time
Permalink
http://makkalviruppam.blogspot.com/2014/05/blog-post_181.html
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.