மாவடிப்பள்ளி சின்னப்பாலத்தை
மக்கள் பிரதிநிதிகள் சீர்செய்ய முன்வர வேண்டும்

அல்-மீசான் பௌண்டசன் தலைவர் அல்-ஹஜ் ஹுதா உமர்



ஒவ்வொரு வருடமும் மழைகாலங்களில் நிரம்பிவலியும் பாலமாக இருந்து வரும் அம்பாரை மாவட்டம் காரைதீவு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மாவடிப்பள்ளி சின்னப்பாலத்தை  யாராவது ஒரு மக்கள் பிரதிநிதி சீர்செய்ய முன்வர வேண்டும். என்ற கோரிக்கையை முன்வைக்க விரும்புகிறேன் . இந்த பாலமானது பலதசாப்தங்களாக அபிவிருத்தியை காணாத ஒன்றாக இருப்பது வேதனையான ஒன்றாகும்.இந்த பாலத்தை மழைகாலங்களில் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது அன்றாட பாவனைக்கு பயன்படுத்துவது இப்பிரதேச அரசியல் தலைவர்கள் நன்றாக அறிந்த ஒன்றாகும் . இப்பாலத்தில் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டும் இன்னும் சீர்செய்ய முடியாதுள்ளது ஏன்? இப்பாலத்தை தினமும் பாடசாலை மாணவர்கள்,கூலி தொழிலாளிகள், விவசாயிகள்,அரச உத்தியோகத்தர்கள்,அரசியல் பிரமுகர்கள் , பொது மக்கள் என எண்ணிலடங்காதோர் பாவித்தும் இதனை சீர் செய்ய எந்த ஒரு அரசியல் தலைவர்களோ அல்லது பொது நலன் பேணும் அமைப்புகளோ முன்வராமலிருப்பது வேதனை தர கூடிய ஒன்றாக உள்ளது .இந்த அம்பாரை மாவட்டத்தில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர் ,மாகாண சபை உறுப்பினர்கள்,இன்னும் பல முக்கிய அரசியல் பதவி வகிக்கும் பிரமுகர்கள் இருந்தும் பாராமுகமாக இருப்பதன் மூலம் கடந்த காலங்களை போல  பல உயிர்,பொருள் சேதங்களை இலக்க நேரிடும் என சுற்றி காட்ட விரும்புகிறேன் . கட்சி ,இன,மத பேதங்களை மறந்து இப்பாலத்தை சீர் செய்ய எவராவது முன்வருமாறு வேண்டிக்கொள்ள ஆசைப்படுகிறேன் . தேர்தல் காலத்து வாக்கு வேட்டைக்கு மாத்திரமே  பயன்பட்டு வரும் இந்த பாலத்தை வெகுவிரைவில் திருத்தியமைத்து மக்கள் பாவனைக்கு உகந்ததாக அமைத்துதருமாறு இப்பிரதேச குடிமகன் என்ற வகையில் சகல அரசியல் தலைவர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடம் தயவாக வேண்டுகோள் விடுக்கிறேன் என அல்-மீசான் பௌண்டசன் தலைவரும், தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் இளையோர் அமைப்பாளருமான அல்-ஹஜ் ஹுதா உமர் தெரிவித்துள்ளார் .


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top