ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஹக்ஸ் மீது
பந்து வேகமாக தாக்கியதில்

அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி



ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹக்ஸ் உள்ளூர் போட்டியில் விளையாடியபோது தலையில் பந்து பட்டதால் ஏற்பட்ட பலத்த காயத்தை அடுத்து அவர் சிட்னியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என அறிவிக்கப்படுகின்றது.
அவரது நிலைமை மோசமாக இருப்பதால் அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறதுஇது குறித்து செயிண்ட் வின்சென்ட் மருத்துவமனையின் பெண் செய்தி தொடர்பாளர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ஹக்ஸ் நிலைமை மிக மோசமாக உள்ளதுசிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறதுஇது எவ்வளவு நேரம் நடக்கும் என்று கூற இயலாது என அவர் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடந்த உள்ளூர் போட்டியின்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த ஹக்ஸ் தனது 63வது ஓட்டம் சேகரிப்பின்போது, நியூ சவுத் வேல்ஸ் அணியின் வேக பந்து வீச்சாளர் சீயன் அபோட் வீசிய பந்தை எதிர் கொண்டார்அந்த பந்து ஹக்சின் ஹெல்மெட்டின் உள்ளே சென்று அவரது தலையை பலமாக தாக்கியதுஇதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதுஉடனடியாக மருத்துவ ஊழியர்கள் மைதானத்திலேயே 40 நிமிடங்கள் வரை சிகிச்சை அளித்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் அவர் நினைவிழந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்அவருக்கு ஸ்கேன் சோதனை நடத்தப்பட்டதுஅதன்பின்னர் அறுவை சிகிச்சைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.  23 வயது நிறைந்த இடது கை பேட்ஸ்மேனான ஹக்ஸ் பந்து பலமாக பட்டவுடன் முழங்கால்களில் தனது கைகளை வைத்து கொண்டு தரையை பார்த்தபடி இருந்தார்அதன்பின்னர் அவர் மைதானத்தில் சரிந்து விழுந்தார் எனக் கூறப்படுகின்றது.

இதனை பார்த்து கொண்டிருந்த வீரர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் உதவிக்காக அவரை நோக்கி ஓடினர்பொதுவாக வேகப்பந்து வீசும்போது அது மணிக்கு 140 மைல்கள் வேகத்தில் பேட்ஸ்மேனை நோக்கி செல்லும்சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டாலும் ஹக்ஸ் பலத்த தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது கிரிக்கெட் வீரர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top