ஏ.எச்.எம் அஸ்வர், எம்.பி பதவியை இராஜினாமா செய்தார்
எம்.எஸ்.அமீர் அலி நியமிக்கப்படலாம் எனத் தகவல்

 ஆளுநராக அஸ்வர்?


ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் .எச்.எம் அஸ்வர், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அஸ்வர் தன்னுடைய இராஜினாமா கடிதத்தை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க திஸாநாயக்கவிடம் கையளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்  ஆளுநராக நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகின்றது.
தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான அஸ்வர் கடந்த 2010ம் ஆண்டு தேர்தலின் பின்னர் ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்ஸ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.     பாராளுமன்ற விவாதங்களின் போது எதிர்க்கட்சியினர் மீது சேறு பூசும் வகையிலான விமர்சனங்களை தொடர்ச்சியாக  அஸ்வர் வெளியிட்டு வந்ததுடன் அண்மைய வரவு செலவுத் திட்ட விவாதம் வரையில் இந்த நடவடிக்கை  தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டிருந்தது.     ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து இவ்வாறு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.   
ஏ.எச்.எம்.அஸ்வரின் இடத்திற்கு எம்.எஸ்.அமீர் அலி நியமிக்கப்பட்டு பிரதி அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. 

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top