யாரை ஏமாற்றுகிறார்கள்?

மக்கள் கேள்வி

நாட்டிலுள்ள 25 நிர்வாக மாவட்டத்தில் 20 மாவட்டங்களில் சிங்கள இனத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்களும் 5 தமிழ் இனத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்களும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். முஸ்லிம்கள் எவருமில்லை

 முஸ்லிம் அரசியல்வாதிகளே சிந்தியுங்கள்.


அம்பாறை மாவட்டத்தில் கரையோர மக்களின் நன்மைகருதி(?) மேலதிக அரச அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார் இவர் டிசம்பர் முதலாம் திகதி தொடக்கம் நிந்தவூர் பிரதேச செயலகக் கட்டடத்தில் செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சுனாமி காலத்தில் கரையோரப்பிரதேச மக்களின் நன்மைக்கு எனக்கூறி மேலதிக அரச அதிபராக யூ.எல்.ஏ.அஸீஸ் நியமிக்கப்பட்டிருந்தார். இவருக்கு கல்முனை பொது நூலகத்தில் அலுவலகமும் வழங்கப்பட்டது.
கரையோரப் பிரதேச மக்களுக்கு  எதுவித சேவையும் வழங்க முடியாத நிலையில் எதுவித அதிகாரமும் வழங்கப்படாமல் அந்த அலுவலகம் இரவோடு இரவாக இல்லாமல் போனது சரித்திரமாகும். அது போன்றுதான் இந்த மேலதிக அரச அதிபர் பதவியும்  அலுவலகமும் தேர்தலின் பின்னர் இல்லாமல் போய்விடும் என மக்கள் கருதுகின்றார்கள்.
அதேநேரம் அம்பாறைக் கச்சேரியில் மேலதிக அரச அதிபராகக் தற்போது கடமை புரியும் மூப்புரிமைப் பட்டியலில் 189 வது இடத்தில் இருக்கும் கே.விமலநாதன் மேலதிக அரச அதிபராக நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில்  மூப்புரிமைப் பட்டியல் அடிப்படையில் 130 வது இடத்தில்  இருக்கும் எம் ஐ. அமீர் அவரின் கீழ் கடமை செய்ய முன்வருவாரா?  என்ற கேள்வியும் உள்ளது.
நாட்டிலுள்ள 25 நிர்வாக மாவட்டத்தில் 20 மாவட்டங்களில் சிங்கள இனத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்களும் 5 தமிழ் இனத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்களும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இன விகிதாசாரப்படி பார்த்தாலும் முஸ்லிம் இனத்தவர்களில் குறைந்தது 2 பேராவது நாட்டில் எப்பகுதியிலாவது மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.
அதாவது 75 சதவீதம் வாழ்கின்ற சிங்களவர்களுக்கு 19 பேரும் 16 சதவீதம் வாழ்கின்ற தமிழர்களுக்கு 04 பேரும் 9 சதவீதம் வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு 02 பேரும் என்ற அடிப்படையில் நியமனம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் எவரும் மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்படுகின்றார்கள் இல்லை. இதனை எமது அரசியல் தலைவர்கள் கணக்கில் எடுப்பதாகவும் இல்லை. பின்வரும் தகவல்களைப் பார்த்தாவது எமது முஸ்லிம் தலைமைகள் நடவடிக்கை எடுப்பார்களா? குறைந்தது 2 முஸ்லிம்களாவது மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்படுவார்களா?.
2014.10.10 ஆம் திகதி அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள இலங்கை நிர்வாக சேவையில் விசேட தரத்தில் மூப்புரிமைப் பட்டியல் அடிப்படையில் பின்வரும் முஸ்லிம்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
மூப்புரிமை இலக்கம்                 பெயர்
11                               எம்.ஐ.எம் றபீக்
30                               எஸ்.எம்.முஹம்மத்
75                               ஏ.அப்துல் மஜீத்
130                              எம் ஐ.அமீர்
158                              யூ.எல்.ஏ.அஸீஸ்
184                               எம்.ஏ.தஜுதீன்
187                               ஏ.மன்சூர்
190                                ஏ.எச்.எம்.அன்ஸார்
207                                ஆர்.யூ.அப்துல் ஜலீல்
208                                ஐ.எம்.ஹனிபா
226                                ஏ.சி.எம்.நபீல்
277                                எம்.அப்துல் அல்லம்
280                                 எம்.எச் முயுனுதீன்
283                                 எம்.எம்.முஹம்மத்
316                                 ஏ.எல்.முஹம்மது சலீம்
இந்நிலையில் 5 மாவட்டங்களில் நியமிக்கப்பட்டுள்ள 5 தமிழ் மாவட்டச் செயலாளர்கள் மூப்புரிமை அடிப்படையில் வருமாறு,
182                    என் வேதநாயகம்   (முல்லைத்தீவு)
228                     பீ.எஸ்.எம்.சார்ல்ஸ் (மட்டக்களப்பு)
244                     எஸ்.அருமைநாயகம் (யாழ்ப்பாணம்)
248                     ஆர்.கீதீஸ்வரன்    (கிளிநொச்சி)
274                      ஆ.பதிநாதன்    (மொனராகலை)

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top