தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட
தமிழக மீனவர்கள் 5 பேரும் விடுதலை
விடுதலை செய்யப்பட்ட மீனவர்களுடன் இலங்கைக்கான இந்தியத் தூதர் ஒய்.கே.சின்ஹா. |
கொழும்புவில் உள்ள இந்திய தூதரகத்தில் விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் ஐந்து பேர் |
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்படுகின்றது. இலங்கை சிறையில் 3 ஆண்டுகளுக்கு பின்னர் இவர்கள் விடுதலையாவது குறிப்பிடத்தக்கது.
இவர்கள்
நீதிமன்றத்தின்
முன் ஆஜர்படுத்தப்பட்டு
விடுதலை செய்யப்பட்டனர். இந்திய
அரசின் வேண்டுகோளை
ஏற்று 5 பேரின்
தூக்கு தண்டனை
இரத்து செய்யப்பட்டது.
தூக்கு தண்டனை
இரத்தானதை அடுத்து
5 பேரும் விடுதலை
செய்யப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்ட மீனவர்
5 பேரும் விரைவில்
தமிழகம் அனுப்பப்படுவார்கள்
என தகவல்
வெளியாகியுள்ளது.
2011-ஆம் ஆண்டு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற
போது 5 பேரும்
கைது செய்யப்பட்டனர்.
மீனவர்கள் 5 பேரும் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை
சேர்ந்தவர்களாவர்.
போதைப்பொருள்
கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக மீனவர்கள்
எமர்சன், பிரசாத்,
லாங்லெட், அகஸ்டஸ்,
வில்சன் ஆகியோருக்கு
அக்டோபர் 30ஆம் தேதி கொழும்பு உயர்நீதிமன்றம்
தூக்கு தண்டனை
விதித்து தீர்ப்பளித்தது.
இதற்கு
தமிழகம் முழுவதும்
கடும் எதிர்ப்பு
எழுந்தது. மேலும்
மீனவர்களை உடனடியாக
விடுவிக்க வலியுறுத்தி
தொடர்போராட்டங்கள் நடைபெற்றன.
இதனையடுத்து
இந்த விவகாரத்தில்
உறுதியான நடவடிக்கை
எடுக்கப்படும் என்று இந்திய மத்திய அரசு உத்தரவாதம்
அளித்தது. அதன்படி
இந்திய அரசு
சார்பில், இலங்கை நீதிமன்றத்தில்
மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேநேரம்
இலங்கை அரசிடம்
மீனவர்களை விடுவிக்கவேண்டும்
என்று
மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தியது.
இதனைத்தொடர்ந்து
இலங்கை அரசு
மீனவர்களின் தூக்குதண்டனையை இரத்து செய்வது குறித்தும்,மீனவர்களை விடுவிப்பது
குறித்து பரிசீலித்தது. அதற்கு
ஏதுவாக இந்தியா
சார்பில் தாக்கல்
செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு வாபஸ் பெறப்பட்டது.
இந்நிலையில்
5 மீனவர்களும் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரும் நாளை தமிழகம் திரும்புகின்றனர். இவர்கள் தற்போது இந்திய தூதரகத்தில் உள்ளனர். இந்த தகவலை இந்திய இலங்கை மீனவர் நல அமைப்பின் ஆலோகர் அந்தோணி முத்து தெரிவித்துள்ளார்
0 comments:
Post a Comment