மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும்
5 தமிழக மீனவர்களை
விடுவிப்பதற்கான வழிமுறைகள்
குறித்து இலங்கை பரிசீலனை
மரண
தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் தமிழகத்தைச் சேரந்த
5 மீனவர்களை விடுவிப்பதற்கான வழிமுறைகளை குறித்து
அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக
அறிவிக்கப்படுகின்றது.
இது
தொடர்பாக தெரிவிக்கப்படுவதாவது,
தமிழக
மீனவர்கள் 5 பேரையும் விடுவிப்பதற்கான வழிமுறைகள் குறித்து
உயர்நிலையில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
அனைத்துக் கோணங்களிலும்
இந்த விவகாரம்
ஆராயப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு நாள்களில்
இது தொடர்பாக
முடிவெடுக்கப்படலாம். அவர்களுக்கு விதிக்கப்பட்ட
மரண தண்டனையை
ஆயுள் தண்டனையாகக்
குறைப்பது, இந்தியாவுடன் 2010ஆம் ஆண்டில் செய்து
கொண்ட ஒப்பந்தப்படி
அவர்களை தாய்நாட்டுக்கு
அனுப்பி வைப்பது,
கடைசியாக அவர்களை
ஜனாதிபதியின் மன்னிப்பு மூலம் விடுவிப்பது
என்ற தொடர்ச்சியான
நடவடிக்கை குறித்தும்
பரிசீலிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த
விவகாரத்தில் நீதிமன்றம் தொடர்பான அம்சத்தையும் அரசு
பரிசீலித்து வருகிறது. முதலில், மரண தண்டனைக்கு
எதிரான மேல்முறையீடு
வாபஸ் பெறப்பட
வேண்டும். ஏனெனில்
மேல்முறையீடு நிலுவையில் இருக்கும்போது தண்டனைக் குறைப்பு
அல்லது விடுதலை
குறித்து முடிவெடுக்க
முடியாது.
மீனவர்களுக்கு
எதிரான குற்றச்சாட்டுகள்
மீதான விளைவுகள்
குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது. ஏனெனில்,
இது அத்துமீறி
மீன் பிடித்த
குற்றச்சாட்டு அல்ல. போதைப் பொருள் கடத்தல்
குற்றம் என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டியிருக்கிறது
எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment