80 வயது
கொலைக்கைதியை மணக்கும்
26 வயது இளம்பெண்!
அமெரிக்காவில்
சம்பவம்
அமெரிக்காவில்
பல விநோதங்கள் நிகழ்வது உண்டு. அதில் ஒன்றாக, 7 பேரை கொடூரமாகக் கொன்ற முதிய கைதியை
இளம் பெண் ஒருவர் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவின்
லாஸ் ஏஞ்சல்ஸ்
பகுதியை சேர்ந்தவர்
சார்லஸ் மேன்சன்
(வயது80). இவர்
கடந்த 1969ம்
ஆண்டுகளில் 7 பேரை கொடூரமாக கொலை செய்தார்.
இக்கொடூர கொலைகளுக்காக
கைது செய்யப்பட்ட
இவர் மீது
நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில்
அவருக்கு ஆயுள்
முழுவதும் சிறையில்
கழிக்கும்படி தண்டனை வழங்கப்பட்டது. தற்போது இவர்
லாஸ்ஏஞ்சல்ஸ் சிறையில் உள்ளார். அங்கு அவரை
சூப்டன் எலைன்ஸ்
பர்டான் என்ற
26 வயது இளம்
பெண் அடிக்கடி
பார்க்க வந்தாள்.
அதைத் தொடர்ந்து
அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. அதன்
பின்னர் இருவரும்
திருமணம் செய்து
கொள்ள முடிவு
செய்தனர். மேன்சன்
சிறை கைதி
என்பதால் கல்போர்னியா
மறுவாழ்வு சீர்
திருத்த துறையில்
அனுமதி பெற
வேண்டும்.
அவர்
தன்னை விட
54 வயது குறைந்த
பர்டனை திருமணம்
செய்ய அனுமதி
கேட்டு கடந்த
7ஆம் திகதி விண்ணப்பம்
செய்தார். அதை
ஏற்று திருமணம்
செய்ய அவருக்கு
அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதையடுத்து இருவரும் விரைவில் திருமணம் செய்து
கொள்கின்றனர். மேன்சன் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக
சிறையில் தண்டனை
அனுபவித்து வருகிறார். இந்த திருமணம் குறித்து
26 வயது பெண்
பார்டன் கூறும்
போது, நாங்கள்
இருவரும் காதலிக்கிறோம்
எனவே திருமணம்
செய்ய முடிவு
செய்துள்ளோம் என்றும் அவர் என்னுடன் வாழ்
நாள் முழுவதும்
இருப்பார் என்றும்
தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment