200 மில்லியன் டொலர்
கேட்டு விதித்த ‘கெடு’ முடிந்தது
ஜப்பானிய பணயக்கைதி கொலை!
200
மில்லியன் டொலர் கேட்டு ஐ.எஸ். போராளிகள்
விதித்த ‘கெடு’
முடிந்ததையடுத்து, அவர்கள் ஜப்பானிய
பயணக்கைதியை கொலை செய்தனர்.
ஈராக்,
சிரியா ஆகிய
நாடுகளில் ஆதிக்கம்
செலுத்தி வரும்
ஐ.எஸ்.
போராளிகள், எதிரி நாட்டினரை பணயக்கைதிகளாக பிடித்து,
தலையை துண்டித்து
கொல்வதை வாடிக்கையாக
வைத்துள்ளனர். அவர்கள், ஜப்பானை சேர்ந்த கெஞ்சி
கோட்டூ, ஹாருணா
யுக்கவா என்ற
2 பேரை சிரியாவில்
பணயக்கைதிகளாக பிடித்தனர்.
இவர்களில்,
கெஞ்சி கோட்டூ,
பத்திரிகையாளர் ஆவார். போர் செய்திகளை சேகரிக்க
சிரியாவுக்கு சென்றிருந்தபோது, போராளிகளிடம்
சிக்கினார். ஹாருணா யுக்கவா, தனியார் பாதுகாப்பு
நிறுவன காண்டிராக்டர்
ஆவார்.
அவர்கள்
இருவரையும் கொல்லப்போவதாக ஐ.எஸ். போராளிகள்
கடந்த 20 ஆம்
திகதி வீடியோ மூலம் மிரட்டல்
விடுத்தனர். வீடியோவில் தோன்றிய போராளி ,
தங்களுக்கு எதிரான போரில், மேற்கத்திய நாடுகளுடன்
ஜப்பானும் ஈடுபட்டு
இருப்பதாக குறை
கூறினார். ’72 மணித்தியாலங்களுக்குள் 200 மில்லியன்
டொலர் தராவிட்டால்,
2 பேரையும் கழுத்தை அறுத்து கொன்று விடுவோம்’
என்று அவர்
கூறியிருந்தார்.
அந்த
போராளி , ஏற்கனவே அமெரிக்க, இங்கிலாந்து
பணயக்கைதிகள் 4 பேரை தலையை துண்டித்து கொலை
செய்தவர் என்று
தெரிய வந்தது.
போராளிகள் பிடியில்
இருந்து இரண்டு
பணயக்கைதிகளையும் விடுவிக்க ஜப்பான் முயற்சி எடுத்து
வந்தது.
இந்நிலையில்,
பணயக்கைதிகளில் ஒருவரான ஹாருணா யுக்கவாவை ஐ.எஸ். போராளிகள்
நேற்று கொலை
செய்தனர். இதுபற்றிய
வீடியோ படத்தை
போராளிகள் வெளியிட்டு
இருந்தனர். அதை பார்த்து, ஜப்பானிய அரசு
கடும் அதிர்ச்சி
அடைந்ததாக அறிவிக்கப்படுகின்றது.
‘இது, கொடூரமான, ஏற்க முடியாத செயல்’ என்று ஜப்பானிய
தலைமை அமைச்சரின்
செயலாளர் யோஷிஹிடே சுகா தெரிவித்திருக்கிறார்.
மற்றொரு பணயக்கைதியான
பத்திரிகையாளர் கெஞ்சி கோட்டூவை உடனடியாக விடுதலை
செய்யுமாறு அவர் வற்புறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
0 comments:
Post a Comment