உண்மையை கூறினால் நான்
செத்தாலும் பரவாயில்லை
உண்மையை கூறுவேன்.
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவிப்பு!
நாட்டில் இடம்பெற்ற மிக முக்கியமான கொலைகள்,
வெள்ளை
வான் கடத்தல்கள்
மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்களுக்கும்
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச காரணம்
நாட்டில்
இடம்பெற்ற மிக
முக்கியமான கொலைகள், வெள்ளை வான் கடத்தல்கள்
மற்றும் ஊடக
நிறுவனங்கள் மீதான தாக்குதல்களுக்கும் பாதுகாப்பு
அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச
காரணம் என
முன்னாள் அமைச்சர்
மேர்வின் சில்வா
தெரிவித்துள்ளார். இரு சந்தர்ப்பங்களில் நான் ஊடகங்களுக்கு எதிராக கூடாத
வசனங்களை பயன்படுத்திவிட்டேன்.
நான் யோசித்து,
அந்த இரண்டு
சந்தர்ப்பங்களிலும் அவற்றை கூறவில்லை. என் அடிமனத்திலிருந்த கோபத்தினாலும் எனது ஆவேசமான செயற்பாட்டினாலும்
நான் அவ்வாறு
நடந்துகொண்டேன். அதற்காக சகல ஊடகங்களிடமும் முதலில்
மன்னிப்பு கேட்டுகொள்கின்றேன். நான்,
ருகுணு பெலியத்தையைச்
சேர்ந்த நல்லதொரு
சிங்கள பௌத்தன்.
என்னிடம் வைராக்கியம்
இல்லை. ருகுணுவை
சேர்ந்தவன் என்பதனால் வைராக்கியம் இருக்காது.
ஆனால், வைராக்கியம் வைத்துவிட்டால்
கடுமையாக காயப்படுத்தாமல்
விடவும் மாட்டேன்.
இந்த கோட்டாபயவும்
பசிலும் என்னை
கீறி, கீறி
காயப்படுத்தியவிட்டனர். என்னுடைய
சட்டத்தரணியான முன்னாள் பிரதி பொலிஸ் மா
அதிபரின் மருமகனுடன்
சென்றே இந்த
முறைப்பாட்டை செய்தேன். நான், பெலியத்தையைச்சேர்ந்தவன் என்பதனால் இதற்கு
பின்னர் எனக்கு
உயிர் அச்சுறுத்தல்
ஏற்படும். என்னுடைய
குடும்பத்தினருக்கு உயிர் அச்சுறுத்தல்
ஏற்படும். நான்
செத்தால் நரியாக
சாகமாட்டேன். சிங்கமாகவே சாகுவேன். எனக்கு யாருடனும்
தனிப்பட்ட வைராக்கியம்
இல்லை.
நானும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும்
எனது மாமாவின்
காரில் ஒன்றாகதான்
கொழும்புக்கு வந்தோம். நான் வேலைச்செய்வதற்கு உருப்படியான அமைச்சு ஒன்றுகூட வழங்கப்படவில்லை
என அவர்
குற்றஞ்சாட்டியுள்ளார். களனி பிரதேச சபைக்குள்
சூழ்ச்சிகளை செய்து என்னை அங்கிருந்து விரட்டுவதற்கு
பசில் ராஜபக்ஷ
முயற்சித்தார். நான் அப்போது இருந்தே தயாராகிவிட்டேன். லசந்த
விக்ரமதுங்க, (சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள்
பிரதம ஆசிரியர்),
பாரத லக்ஷமன்
பிரேமச்சந்திர (முன்னாள் அமைச்சர்), ராகமை லொக்கு
சியா, வெள்ளை
வான் சம்பவங்கள்
ஆகியவற்றின் ஆசிரியர் கோட்டாபய ராஜபக்ஷ, ஆம்
இதனை நான்
பொறுப்புடன் தான் கூறுகின்றேன். சிரச மற்றும் சியத்த
ஆகிய ஊடகநிறுவனங்கள்
மீது மேற்கொள்ளப்பட்ட
தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின்
செயலாளர் கோட்டாபய
ராஜபக்ஷ தெரிந்துவைத்திருந்தார். உண்மையை
கூறினால் நான்
செத்தாலும் பரவாயில்லை. உண்மையை கூறுவேன். எனக்கு
எதிராக ஒரு
சிறு குற்றச்சாட்டுகளையும்
முன்வைக்கமுடியாது. நான் பெண்களை
திருடவில்லை. ஊழல் பேர்வழியான பொருளாதார
அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சரான பசில்
ராஜபக்ஷவுக்கு டுபாயில் மெரியட் என்றொரு பெயரில்
ஹோட்டல் இருக்கின்றது.
உடவல வீதி
தனமன்விலவில் பெரிய ஹோட்டல் ஒன்று இருக்கிறது.
அது அவருடைய
மருமகனுடையது. கிட்டத்தட்ட 20 அல்லது 13 ஏக்கர் விசாலமானதாகும். மல்வானையில்
23 ஏக்கரில் வீடொன்று இருக்கின்றது. கம்பஹா ஒருத்தொட்டவில்
விசாலமான காரியாலயமொன்றும்
இருக்கின்றது. இவை இரண்டையும் தனியார் நிறுவனங்கள்
இரண்டே நிர்மாணித்துக்
கொடுத்தன. கோல்பேசில்,
அவருடைய மனைவிக்கு
பங்குகள் இருக்கின்றன.
திவிநெங்கும திட்டத்தின் ஊடாக 400 கோடி ரூபாய்
சூரையாடப்பட்டது. வங்கியை உடைத்தால் சிறைக்கு செல்லவேண்டும்.
எனினும், திணைக்களங்களிலிருந்து
வங்கிக்கு பணத்தை
பாதுகாப்பாக எடுத்துவருவதாக கொண்டுசெல்லப்படுகின்ற
பாதுகாப்பு பெட்டகங்களை பயன்படுத்தி திறைச்சேரி உடைக்கப்பட்டது. அந்த பணம் யாவும்,
பசில் ராஜபக்ஷவின்
தேர்தல் நடவடிக்கைகளுக்கே
பயன்படுத்தப்பட்டன. இவையாவும் எல்லோருக்கும்
தெரியும். ஆனால்,
பயந்துகொண்டிருக்கின்றார்கள். நான் பயப்பிடமாட்டேன்.
அதனால் தான்
உண்மையை கூறுகின்றேன்.
இந்த ஊழல்
மற்றும் மோசடிகள்
தொடர்பில் நாட்டுமக்களுக்கு
நன்கு தெரியும். நல்லாட்சியுடன்
நான் முன்னரே
இணைந்துகொண்டேன். நானும் ராஜித்த சேனாரத்ன, ரவி
கருணாநாயக்க, ஜனக்க பண்டார தென்னக்கோன் ஆகியோரே
முதன்முதலில் கலந்தாலோசித்தோம். என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனக்கு
ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேனவின் மீது நம்பிக்கையிருக்கின்றது.
அரசியல் அனுபவம்
வாய்ந்த ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும்
ஊழல் மோசடிகள்
இன்றி நல்லாட்சியை
ஏற்படுத்துவார்கள் என்று எனக்கு
நன்றாக தெரியும். பழிவாங்க
மாட்டார்கள், வரலாற்றில் பதியும் படி நாட்டில்
நல்லாட்சியை ஏற்படுத்துவார்கள். ஊடக சுதந்திரம் கிடைக்கும்.
தவறிழைத்தோருக்கு தண்டனை கிடைக்கும் என அவர்
குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.