இந்தியா சென்றுள்ள
ஒபாமாவின் பாதுகாப்பு
ஒபாமாவின்
இந்திய வருகையையொட்டி மத்திய டில்லியில்
பாதுகாப்பு கடுமையாக்கப் பட்டுள்ளது.
71 கட்டிடங்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. இந்த பகுதிக்குள்
எம்பிக்கள், இராணுவ அதிகாரிகள் உட்பட யாரும்
எளிதில் நுழைய
முடியாது. சிறப்பு
பாஸ்களை காட்டினால்
மட்டுமே அனுமதி
அளிக்கப்படும். சிறப்பு கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு
அமெரிக்க உளவுப்படை
அதிகாரிகளும் மத்திய பாதுகாப்புப் படை அதிகாரிகளும்
குடியரசு தின
விழாவை கண்காணிக்க
உள்ளனர்.
டில்லியை
சுற்றி சுமார்
400 கி.மீ.
சுற்றளவுக்கு விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துமீறி விமானங்கள்
நுழைந்தால் அதை சுட்டுத் தள்ள பீரங்கிகள்
தயார் நிலையில்
நிறுத்தப்பட்டுள்ளன. விழா நடைபெறும்
டில்லி ராஜபாதையில்
7 அடுக்கு பாதுகாப்பு
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக
80 ஆயிரம் வீரர்கள்
பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என
தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment