கல்முனை கல்வி சமூகத்தின் சிந்தனைக்கு



கல்முனை ஸாஹிறாவிலிருந்து மருத்துவ பீடத்திற்கு இம்முறை மாணவர்எவரும் தெரிவாகவில்லை!
தேசியரீதியாக மதிப்புப் பெற்று வரலாறு படைத்துக்கொண்டிருந்த  இத்தேசிய பாடசாலைக்கு இன்று என்ன நடந்துவிட்டது!!

கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையிலிருந்து இம்முறை மருத்துவத்துறைக்கு எவரும் தெரிவாகாத நிலையில்  ஒரே ஒரு மாணவர் மட்டும் பொறியியல்துறைக்கு தெரிவாகி இருப்பது குறித்து கல்முனைப் பிரதேச கல்வி சமூகம் இக்கல்லூரியில் கல்வி புகட்டப்படுவதில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவு குறித்து ஆராய வேண்டியுள்ளது.
கடந்த காலங்களில் இக்கல்லூரியிலிருந்து வருடா வருடம் பெரும் எண்ணிக்கையான மாணவர்கள் மருத்துவத் துறைக்கும் பொறியியல் துறைக்கும் தெரிவாகி கல்லூரிக்கும் இப்பிரதேசத்திற்கும் பெருமை தேடிக் கொடுத்தார்கள். (விபரங்களை அட்டவணையில் பார்க்கமுடியும்)
1949.11.16ல் ஆரம்பிக்கப்பட்டு தேசிய ரீதியாக மதிப்புப் பெற்று வரலாறு படைத்துக்கொண்டிருந்த இத்தேசிய பாடசாலைக்கு இன்று என்ன நடந்துவிட்டது?
கல்முனைக் கல்வி வலயத்தில் அமைந்திருக்கும் பல உயர்தர பாடசாலைகளில் பல மாணவர்கள் மருத்துவத்துறைக்கும் பொறியியல்துறைக்கும் தெரிவாகியுள்ள நிலையில் ஏன் இக்கல்லூரியிலிருந்து கடந்த சில வருடங்களாக மருத்துவத்துறைக்கு மாணவர்கள் தெரிவு செய்யப்படாமல் பின் தள்ளப்பட்டிருக்கிறார்கள்?
இக்கல்லூரி அமைந்துள்ள பாதையில் இக்கல்லூரி உருவாக்கப்பட்டு பல வருடங்களுக்குப் பின்னர் 1971.01.01ல் பெண்களுக்கு என தனியாக ஆரம்ப்பிக்கப்பட்ட கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியிலிருந்து இம்முறை 5 மாணவிகள் மருத்துவத்துறைக்கும் 3 மாணவிகள் பொறியியல்துறைக்கும் தெரிவாகி இருக்கும்போது கல்முனை ஸாஹிறாவில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இப்பொழுது என்ன நடந்து கொண்டிருக்கிறது? ஏன் இந்தக் கல்லூரியில் கற்கும் மாணவர்ளை மருத்துவர்களாகவும் பொறியியலாளர்களாகவும் பல்கலைக்கழகம் அனுப்ப முடியாமல் உள்ளது?
கல்முனைக் கல்வி வலயத்திலுள்ள  கார்மேல் பத்திமா கல்லூரியில் 6 மாணவர்கள் மருத்துவத்துறைக்கும் 3 மாணவர்கள் பொறியியல்துறைக்கும் மருதமுனை அல்-மனார் மஹா வித்தியாலயத்தில் 3 மாணவர்கள் மருத்துவத்துறைக்கும் நிந்தவூர் மஹா வித்தியாலயத்தில் 2 மாணவர்கள் மருத்துவத்துறைக்கும் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இதேவேளை, சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட சம்மாந்துறை மத்திய மஹா வித்தியாலயத்திலிருந்து 6 மாணவர்கள் மருத்துவத்துறைக்கும் 3 மாணவர்கள் பொறியியல்துறைக்கும்  தெரிவாகியுள்ள நிலையில் கல்முனை ஸாஹிறா மாணவர்களுக்கு என்ன நடந்துவிட்டது?
கல்முனை ஸாஹிறாவில் தேவைக்கு மேலதிகமாக உயிரியியல் விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அப்படியானால் இங்கு உயர்தரம் கற்கும் விஞ்ஞான மாணவர்களுக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது?
எல்லாவத்திற்கும் மேலாக இக்கல்லூரியில் அதிபராக இருந்த அதிபர்கள் கல்லூரியினதும் மாணவர்களினதும் முன்னேற்றம் கருதி கல்லூரிக்குள்ளேயே தமது முழு நேரத்தையும் செலவழித்தனர். இதற்கு உதாரணமாக (01.04.1964 – 15.10.1966) அதிபராகப் பதவி வகித்த கே.எம். அபூபக்கர் (01.11.1972 -30.03.1975)  கே.எல். அபூபக்கர்லெவ்வை போன்றவர்களைக் குறிப்பிட முடியும்,
ஆனால், இன்று இக்கல்லூரியில் என்ன நடக்கின்றது 7.30 தொடக்கம் 2.30 வரை கடமையாற்றுகின்றார்கள்.

கல்முனை ஸாஹிறாக் கல்லூரியிலிருந்து
பல்கலைக்கழகம் சென்றவர்கள் விபரம்(1968-2006)

மருத்துவம்        104 மாணவர்கள்
பொறியியல்       124 மாணவர்கள்
பல் மருத்துவம்    04  மாணவர்கள்
மிருக வைத்தியம்  04 மாணவர்கள்
சட்டம்                03 மாணவர்கள்
ஏனைய துறைகள் 662 மாணவர்கள்  மொத்தம்-----901 மாணவர்கள்


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top