மந்திரிப்
பதவிக்கு போட்டி போடுவோரே ,மாவடிப்பள்ளி
சின்னப் பாலத்தின் அவல
நிலை எப்போது தீரும்........!
Ihsan Mohamed Salideen
கிழக்கு
மாகாணத்தில் அம்பாரை மாவட்டத்தில் காரைதீவுப் பிரதேச
சபைக்குட்பட்ட அம்பாரை கல்முனை பிரதான வீதியில்
குறுனல் கஞ்சி
ஆற்றுக்கு மேலால்
அமைந்துள்ள பாலமே மாவடிப்பள்ளி சின்னப்பாலம் ஆகும்.
ஆங்கிலேயர்
காலத்தில் கரையோரத்திலிருந்து
இலங்கயின் மத்திய
மலைநாட்டுக்குப் போக்குவரத்தை இலகுவாக்குவதற்காக
ஆங்கிலேயரினால் கோஸ்வேயுடன் சேர்த்து வடிவமைக்ககப்பட்ட பாலங்களில் இந்தப்பாலமும் ஒன்று.
அன்று
தொடக்கம் இன்றுவரையும்
ஒவ்வொரு மாரிகாலமும்
வீதிக்குக் குறுக்காக ஆறு பெறுக்கெடுத்துப் பாய்வதன் மூலம் அன்றாடப் போக்குவரத்துக்கள்
பெரிதும் பாதிக்கப்படுவது
இந்தப்பாலத்துக்கு அன்மயிலுள்ள பிரதேச
மக்களின் நீண்டநாற்க்
குறையாக இருந்து
வருகின்றது.
இப்பிரதேசத்தில்
இதன் அவல
நிலையை ஒவ்வொரு
மாரிகாலத்தில் மட்டும் மக்களால் விசனம் தெரிவிக்கப்படுவதும்
பின்னர் மாரிகாலம்
முடிந்தவுடன் "பளய குறுடி
கதவைத்திறடி" என்றாற் போல்
மக்கள் இதைப்பற்றி
கணக்கில் எடுக்காததும்
வழமையானதே......
இந்தப்
பிரதேசத்தில் அரசியல் அதிகாரம் கொண்ட அமைச்சர்கள்,
பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகானசபை அமைச்சர்கள்,உறுப்பினர்கள்
இருக்கின்ற போதும் இவர்களினுடைய பராமுகத் தன்மை
இப்பிரதேச மக்களுக்கு
வேதனையளிக்கின்றது.
இந்தப்பாலத்தை
உயர்த்துவது சம்மந்தமாக இப்பிரதேசத்திலுள்ள
ஒவ்வொரு அரசியல்வாதிகளும்
கட்டாயம் சிந்தித்து
இன்று மலர்ந்துள்ள
ஆட்சி மாற்றத்திலாவது
இந்தப்பாலத்தை உயர்த்தவேண்டும் என இப்பிரதேச அரசியல்
வாதிகளிடம் இப்பிரதேச மக்கள் சார்பாக வேண்டுகின்றேன்.
0 comments:
Post a Comment