800 கோடி ரூபாய் அரசு பணம் கையாடல்?
கோத்தபாய ராஜபக்ஸவிடம் பொலிஸார் விசாரணை

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சகோதரருமான  கோத்தபாய ராஜபக்ஸ  800 கோடி ரூபாய் அரசு பணத்தை கையாடல் செய்தது தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என அறிவிக்கப்படுகின்றது.
புதிய இராணுவ தலைமையாகத்தை அமைப்பதற்காக இந்த பணத்தை தனது பெயரில் உள்ள கணக்கில் வைத்திருந்ததாக கோத்தபாய ராஜபக்ஸ அண்மையில் தெரிவித்திருந்தார். இராணுவ தலைமையாகத்திற்கு சொந்தமான நிலத்தை விற்றதில் கிடைத்த இந்த பணத்தை, தனது பெயரில் இருந்த கணக்கில் வைத்திருப்பதற்கு அப்போதய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்திருந்தார்.
இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் இது அரசியல் அமைப்பை மீறும் செயல் என்று கருதப்படுகிறது. நாட்டின் நிதியை கையாளும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு மட்டுமே உள்ள நிலையில், அமைச்சரவையே அனுமதி அளித்தாலும் தனி நபர் அதனை வைத்துகொள்ள முடியாது என்று கணக்கு ஆய்வாளர்கள்  தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அரசு பணத்தை முறைகேடாக கையாடல் செய்த கோத்தபாய ராஜபக்ஸவிடம் இலங்கை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top