மருதூருக்கே களங்கத்தையும்
அபகீர்த்தியையும் ஏற்படுத்தி விட்டார்கள்!!!
இன்று
24. 01. 2015 இரவு சாய்ந்தமருது பரடைஸ்
வரவேற்பு மண்டபத்தில்
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினர் (NFGG) மக்கள் சந்திப்பொன்றை
நடத்தி அவர்களின்
நிலைப்பாட்டையும் அவர்களின் கொள்கைகளையும் விளக்க முற்பட்டார்கள்.
நல்லாட்சிக்கான
தேசிய முன்னணியினர்
(NFGG) எழுச்சியை விரும்பாத மருதூரின் உள்ளுர் அரசியல்வாதி
ஒருவரின் அடாவடிக்கும்பல்
வேண்டுமென்றே அந்த சந்திப்பில் கலந்து கொண்டு
குழப்பத்தை விளைவித்து, கற்களை வீசி மண்டபத்தின்
கண்ணாடிகளுக்கும் சேதங்களை விளைவித்து மருதூருக்கே களங்கத்தையும்
அபகீர்த்தியையும் ஏற்படுத்தி விட்டார்கள் எனக் கூறப்படுகின்றது.
நல்லாட்சி
வேண்டுமென்று மக்கள் மாற்றத்தை ஏற்படுத்தி நிம்மதிப்
பெருமூச்சு விடுவதற்குள் மக்களை அப்படி நாங்கள் மாறவிட மாட்டோம்
என்று சில்லறை
அரசியலைக் காட்டியிருக்கிறார்கள் என நடுநிலையிலுள்ளவர்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
கருத்துச்
சுதந்திரம் பறிக்கப்பட்டிருந்த காலம் மாறி, நல்லாட்சி
மலர்ந்துள்ள இந்த தருணத்தில் கருத்துக்களைச் சொல்ல
முடியாமல் குழப்பம்
விளைவித்ததை என்னவென்று சொல்வது? என்றும் இவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தங்களின்
ஊருக்கு கிடைக்கவேண்டிய
அரசியல் அதிகாரங்கள்
மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன, நிருவாக அதிகாரங்கள் மறுக்கப்பட்டுக்
கொண்டிருக்கின்றன, கிடைக்க வேண்டிய
எவையெல்லாமோ மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
அவற்றைத் தட்டிக்
கேட்பதற்கு நாதியில்லை. அவை மறுக்கப்படுகின்றனவே என்று யோசித்துப் பார்ப்பதற்குக் கூட
வக்கில்லை. கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதற்கு மட்டும்
அந்த சில்லறைகளால் எப்படி முடிகிறது என்றும் வினா தொடுக்கின்றனர்.
0 comments:
Post a Comment